ETV Bharat / state

"நீங்களே நாளைக்கு மாற்றி பேசுவீங்க" - வானதிக்கு பதிலளித்த கே.என்.நேரு - Coimbatore Corporation News

கோவையில் உள்ள அனைத்து நகரங்களிலும் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார்.

கோவையில் ரூ.200 கோடி செலவில் கால்வாய் தூர்வாரும் பணிகள் ஆரம்பம்- அமைச்சர் கே.என்.நேரு

author img

By

Published : Jan 13, 2023, 6:25 PM IST

சென்னை: இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் முத்துராஜா, "கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கோவை தெற்கு தொகுதியில் மசால் லே அவுட் பகுதியில் கிட்டத்தட்ட 300 குடும்பங்கள் உள்ளன.

நீண்ட நாட்களுக்கு முன்னதாக அமைக்கப்பட்ட கால்வாய் ஆக்கிரமிப்பு ஒரு புறம், கழிவுநீர் கலந்து வரக்கூடிய நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனை சுகாதாரமாக மாற்றித் தர வேண்டும்", என கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, "கோவை மாநகராட்சி மூலமாக இதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டது. அந்த கால்வாய் ஓரத்தில் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக அவர்களுக்கு வேறு இடம் மாற்றி கொடுத்து தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

இல்லையென்றால் இவர்களே கூட நாளை அவர்களை காலி பண்ண கூடாது என போராட்டத்தில் ஈடுபடுவார்கள். ஏற்கனவே சாலை சரியில்லை என்று கூறியிருந்தார்கள். தற்போது ரூ.200 கோடியில் கோவையில் உள்ள அனைத்து சாலைகளும் மேம்படுத்தப்படும்.

கோவையில் உள்ள அனைத்து நகரங்களிலும் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நகரங்களிலும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் மூலம் சுத்திகரித்து தரும் பணியையும் முன்னெடுத்து வருகிறோம்", என்றார்.

இதையும் படிங்க:Pongal Bonus: ஆவின் பணியாளர்களுக்கு ரூ.2.70 கோடி பொங்கல் போனஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.