ETV Bharat / state

ஸ்மார்ட் சிட்டி முறைகேடு விசாரணையில் தெரிந்துவிடும் - அமைச்சர் கே.என்.நேரு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு இல்லை என்று கூறும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விசாரணை ஆணையம் அமைத்தவுடன் தெரிந்துவிடும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

ஸ்மார்ட் சிட்டி முறைகேடு விசாரணையில் தெரிந்துவிடும்

author img

By

Published : Nov 11, 2021, 8:19 AM IST

சென்னை: கொருக்குப்பேட்டை தொகுதிக்குட்பட்ட அம்பேத்கர் நகர்ப் பகுதியில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் சேகர்பாபு ஆகியோர் மழைநீர் தேங்கிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, "கொருக்குப்பேட்டையில் ஏற்கனவே மழைநீரை உறிஞ்சி வெளியேற்றும் பணி நடந்து வந்தது. மோட்டார் பழுது அடைந்து விட்டதால் உயர் ரக மோட்டார் கொண்டுவரப்பட்டு இங்கிருந்து மழைநீர் அனைத்தும் வெளியேற்றப்படும். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்தப் பகுதிகளுக்கு வந்திருக்க மாட்டார். வந்திருந்தால் இங்குத் தண்ணீர் தேங்கியது பற்றி அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

சென்னையில் அதிக அளவில் வெள்ளச் சேதம் ஏற்பட்டது அதிமுக ஆட்சியில் தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களத்தில் இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த காலங்களில் தான் மழை நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பல்வேறு கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் அது போன்ற செயல்களை அதிமுக ஏதும் செய்யாமல் பழியை தற்போதைய திமுக அரசு மீது சுமத்துகின்றனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு செய்து இருக்கிறார்களா இல்லையா என்பது விசாரணை ஆணையம் அமைத்தவுடன் தெரியும், தவறு செய்தவர்கள் எப்படி ஒப்புக் கொள்வார்கள்" எனக் கேள்வி எழுப்பினார்

இதையும் படிங்க: நாளை கனமழை; எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் தயார் - அமைச்சர் கே.என்.நேரு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.