ETV Bharat / state

கரோனா வழிமுறைகள் அடங்கிய 'கையேடு': அமைச்சர் கே.என். நேரு வெளியீடு! - அமைச்சர் நேரு

சென்னை: கரோனா தொற்று பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய கரோனா கையேட்டினை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு வெளியிட்டார்.

கரோனா வழிமுறைகள் அடங்கிய 'கரோனா கையேடு
கரோனா வழிமுறைகள் அடங்கிய 'கரோனா கையேடு
author img

By

Published : Jun 13, 2021, 10:20 AM IST

கரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்து, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியவர்களை கண்காணிக்க பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி ஆலோசனை வழங்கும் திட்டத்தையும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களுக்குக் கரோனா குறித்து தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ், ஆங்கிலத்தில் அனைத்து விவரங்களும் அடங்கிய 16 பக்கங்கள் கொண்ட கரோனா விழிப்புணர்வு கையேடு தயார் செய்யப்பட்டுள்ளது.

கையேட்டில் என்னென்ன தகவல்கள் உள்ளன?

இந்த கையேட்டில், எவ்விதமான நோய் அறிகுறிகள் இருந்தால் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், பரிசோதனை செய்யும் இடங்கள், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்,

வீட்டில் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், கண்காணிக்க வேண்டிய அபாய அறிகுறிகள், அவசர மருத்துவ சேவைக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் போன்ற தலைப்புகளில் பொதுமக்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் விளக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆக்ஸிஜன் அளவு குறைந்தால் உடனடியாக எடுக்க வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டில் தனிமையில் உள்ளவர்கள் பயன்படுத்திய கழிவுகள் அகற்ற வேண்டிய முறைகள், தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம், போன்ற விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

கரோனாவுக்குப் பின் உதவும் தன்னார்வலர்கள் குழு:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவல்கள் அறிய நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

பயிற்சி அளிக்கப்பட்ட தொலைபேசி அழைப்பாளர்கள் கரோனா தொற்றாளர்களைத் தொடர்பு கொண்டு தலைவலி, உடல் வலி , உடல் சோர்வு, தூக்கமின்மை, இருமல், சுவாசப் பிரச்னைகள் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா என்பதைப் பற்றி தெரிந்து கொள்வர் .

அறிகுறிகள் இருக்குமாயின் தொடர்பு மைய தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்; உளவியல் ஆலோசனைகள் தேவைப்படுவோருக்குத் தொலைபேசி வழியாக மனநல மருத்துவர்களிடம் ஆலோசனை வழங்கப்படும்.

உணவு தொடர்பாக சந்தேகங்களுக்கு உணவியல் நிபுணரிடம் தொடர்பு கொண்டு ஆரோக்கியம், சத்தான உணவுகள் குறித்த ஐயங்களைக் கேட்டறிந்து கொள்ளலாம்.

94980 15100/ 94980 15200/ 94980 15300/ 94980 15400 என்ற எண்களில் இருந்து கரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களுக்குத் தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்படும்.

கரோனாவிற்குப் பிறகான அறிகுறி உள்ள நபர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் தகவல் தொடர்பு மையத்தின் GCC Vidmed என்ற செயலி மூலமும், 94983 46510 / 94983 46511 / 94983 46512/ 94983 46513/ 94983 46514 என்ற எண்ணிலுள்ள வாட்ஸ்அப் எண்களில் வீடியோ மூலமும் தொடர்பு கொள்ளலாம். மேலும் உளவியல் தொடர்பாக 044 4612 2300 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம் .

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.