ETV Bharat / state

ஒன்றிய அரசா, மத்திய அரசா? குழம்பிய கே.என். நேரு - குடிநீர் திட்டங்களுக்கு மதிப்பீடு தயார்

முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து, அனைத்திலும் ஒன்றிய அரசு என்றே மத்திய அரசை குறிப்பிடுகிறது திமுக. இந்நிலையில் அமைச்சர் கே.என். நேரு, செய்தியாளர்களிடம் பேசியபோது, முதலில் மத்திய அரசு எனப் பேசிவிட்டு, சட்டென அதைத் திருத்தி ஒன்றிய அரசு என்றார்.

minister kn nehru controversy
அமைச்சர் கே.என். நேரு
author img

By

Published : Jul 16, 2021, 6:26 PM IST

சென்னை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் இன்று (ஜூலை 16) நடைபெற்றது. செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என். நேரு, "தமிழ்நாட்டில் ஆறு கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள் தொடங்குவதற்குத் தயாராக உள்ளன.

திருச்சியில் 293 குடியிருப்புக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், கோயம்புத்தூரில் அன்னூர், மூப்பேரிப் பாளையம் பேரூராட்சிகள், அவிநாசி பேரூராட்சி கூட்டுக் குடிநீர்த் திட்டம், வேலூர் மாநகராட்சியில் உள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டம், ஊத்தங்கரை பேரூராட்சி கூட்டுக் குடிநீர்த் திட்டம் தயாராகவுள்ளது.

குடிநீர்த் திட்டங்களுக்கு மதிப்பீடு தயார்

திருப்பூர் ஊராட்சி ஒன்றியங்களில் 155 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி குடிநீர்த் திட்டம் ஆகிய ஆறும் தயாராக உள்ளன. சுமார் 200 குடிநீர்த் திட்டங்களுக்குத் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் 60 எம்எல்டி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், ராசிபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் திண்டுக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் மேம்பாட்டுத் திட்டம், பாபநாசம், அம்மாபேட்டை ஒன்றியங்களுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், ராமநாதபுரம் மாவட்டம் குதிரை மொழியில் 60 எம்எல்டி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட 21 திட்டங்களுக்கு மதிப்பீடுகள் தயாராக உள்ளன.

கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கான ஆய்வுப் பணி

திருவாரூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திண்டுக்கல், ராணிப்பேட்டை, மதுரை, கள்ளக்குறிச்சி, வேலூர் ஆகிய ஏழு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை உருவாக்குவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற உள்ளன.

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 38 திட்டங்களையும் செயல்படுத்துவதற்கான அறிக்கைத் தயாரிக்கும் பணிகளை ஆய்வுசெய்ய தொடங்கியுள்ளோம். படிப்படியாக அனைத்துத் திட்டங்களும் முடிக்கப்பட்டு மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்வோம்.

பாதாள சாக்கடைத் திட்டம்

பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளையும் சரிசெய்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் அனைத்தையும் முடிக்க முடியாது, படிப்படியாக விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு மாதம்தான் ஆகின்றது. கடந்த இரண்டு மாதம் முதலமைச்சர் முழுமையாக கரோனா தடுக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். தற்போதுதான் ஒவ்வொரு துறையாக ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.

குடிநீரைப் பொறுத்தவரை முழுமையாக வழங்க முடியாது. குடிநீர் வழங்குவதற்கு நீர் ஆதாரம் இருக்க வேண்டும். நீர் ஆதாரம் இருந்தாலும் அதனை எடுத்துச் செல்வதற்கான குழாய்கள் உடையாமல் இருக்க வேண்டும். இரண்டும் இருந்தாலும் மின்சாரம் இருக்க வேண்டும்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை ஆய்வுசெய்ய வேண்டும் என முதலமைச்சர் கூறினார். அத்திட்டம் 2031ஆம் ஆண்டு அப்பகுதி மக்களுக்குப் போதுமான தண்ணீர் அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. இப்போது மக்கள் தொகை அங்கு அதிகரித்துள்ளதால் கூடுதலாகத் தண்ணீர் தேவைப்படுகிறது.

இதுபோன்ற சூழ்நிலைகளால் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. நபார்டு வங்கிக்கு எங்களுக்குத் தேவையான திட்ட அறிக்கை அளிக்கிறோம். அதன் அடிப்படையில் அவர்கள் நிதியினை ஒதுக்கீடு செய்கின்றனர்" என்றார்.

உளறிக்கொட்டிய கே.என். நேரு

தொடர்ந்து ஜல் ஜீவன் மிஷன் திட்டம் குறித்து பேசிய அவர், "நிதி ஆதாரத்தைப் பல்வேறு திட்டங்களின் மூலம் பெறுகிறோம். ஒன்றிய அரசிடமிருந்து நிதியினைக் கேட்கிறோம். ஜல் ஜீவன் திட்டம் இதுவரை கிராமப்புற தம்பதிகளுக்கு மட்டுமே இருந்தது.

அமைச்சர் கே.என். நேரு பேட்டி

நடப்பாண்டிலிருந்து நகர்ப்புறப் பகுதிகளுக்கும் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி வருமானால் 50 விழுக்காடு மத்திய அரசிடமிருந்து பெறப்படும்" என்றார்.

மத்திய அரசு எனக் குறிப்பிட்டுப் பேசிய மறுநொடியே ஒன்றிய அரசும், மாநில அரசும் நிதியை வழங்கி திட்டங்களைச் செயல்படுத்தும் என்றார்.

இதையும் படிங்க: 'ஒன்றிய அரசு' எனும் சொல்லாடலைத் தான் தொடர்ந்து பயன்படுத்துவோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.