சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள கரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வுமேற்கொண்டு அப்பகுதி மக்களுக்கு கரோனா நிவாரண பொருள்கள், கபசுரக் குடிநீர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்க அரசு உறுதிமிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை இன்னும் இரடிப்பாகவில்லை. குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
குறிப்பாக சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 37 ஆயிரம் தெருக்கள் உள்ளன. கரோனாவால் பாதிக்கப்பட்ட தெருக்கள் 7 ஆயிரத்து 300ஆக உள்ளன. கரோனா நிவாரண தொகையை மக்களின் வீடுகளுக்குச் சென்றுதான் வழங்க வேண்டும். அதை மீறி கடைக்கு வரச்சொல்லி பணம் கொடுப்பதாக ஏதேனும் தகவல் வந்தால், அந்த அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் போதுமானதா? என்ற கேள்விக்கு, மக்களின் தேவையறிந்து முதலமைச்சர் உதவி செய்து வருகிறார் என பதில் அளித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க முடிவு?