ETV Bharat / state

சென்னை மாநகராட்சியில் 88 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர் - அமைச்சர் காமராஜ் தகவல் - மாவட்ட செய்திகள்

சென்னை: மாநகராட்சி முழுவதும் நோயினால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களில் 88 விழுக்காடு பேர் குணமடைந்துள்ளனர் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

 Minister kamaraj discussion with officials

author img

By

Published : Aug 15, 2020, 3:14 AM IST

உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் கரோனா தொற்று நோய் கட்டுப்படுத்துதல் குறித்து பெருநகர் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர்களுடன் நேற்று (ஆக.14) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இதுதொடர்பாக அவர் பேசியதாவது:

பெருநகர் சென்னை மாநகராட்சி பகுதிகளில் கரோனா தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்த முதலமைச்சர் ஆலோசனைப்படி, தமிழ்நாடு அரசு கரோனா நோய்த் தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டதன் காரணமாகவும், பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தியதாலும், சென்னை மாநகராட்சி முழுவதும் நோயினால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களில் 88 விழுக்காடு பேர் குணமடைந்துள்ளனர்.

குறிப்பாக, 8 ஆவது மண்டலத்தில் 89 விழுக்காடும், 9 ஆவது மண்டலத்தில் 91 விழுக்காடும், 10 ஆவது மண்டலத்தில் 88 விழுக்காடும் குணமடைந்துள்ளனர்.

மே மாதம் 8ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடத்தப்பட்ட 31 ஆயிரத்து 702 மருத்துவ முகாம்கள் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன.

இதில், 17 லட்சத்து 86 ஆயிரத்து 970 நபர்கள் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டதில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 390 நபர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் கண்டறியப்பட்டு. 96 ஆயிரத்து 805 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் வந்து பரிசோதனை செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கவும், தொற்று அறிகுறி தென்படுபவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து குணமடைந்து வீடு திரும்பும் வரை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கவும், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தி பொதுமக்களிடம் கரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கரோனா நோய்த் தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் அனைவரும் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்கவும், அவ்வாறு வெளியில் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.

முதலமைச்சர் தமிழ்நாட்டில் கரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தி வெகு விரைவில் கரோனா நோய் இல்லாத மாநிலமாக மாற்ற எடுக்கப்பட்டுவரும் சீரிய நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் உரிய ஒத்துழைப்பு நல்கி, அரசு கூறும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்

இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.