ETV Bharat / state

'ஒற்றை தலைமைக்கு காலம்தான் பதில்சொல்லும்..!' - அமைச்சர் ஜெயகுமார் - single leadership

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது காலம் தான் பதில் சொல்லும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்
author img

By

Published : Jun 10, 2019, 10:23 PM IST

சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து திமிங்கலம் போல் ஆட்சியை கலைக்க சதி செய்து வருகின்றனர். அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது காலம் தான் பதில் சொல்லும். அதுவும் இல்லாமல் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு எடுக்க வேண்டியது அதிமுக கட்சியின் தொண்டர்கள்தான்.

வருகிற 12ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட இருக்கிறது அதிலே அவரவர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இது அறையிலே விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். இன்னும் இரண்டு ஆண்டுகள் அதிமுக அரசு ஆட்சியை யாராலும் கலைக்கமுடியாது. ஆட்சி கலைப்பது போல் ஸ்டாலின் தினமும் கனவு மட்டும்தான் காணமுடியும்.

ஒற்றை தலைமை என்பது காலம் தான் பதில்சொல்லும் - அமைச்சர் ஜெயகுமார்

அண்ணா சொன்னதைப் போல் பதவி என்பது தோளில் உள்ள துண்டு போன்றது. ஆனால் மானம் என்பது இடுப்பில் உள்ள வேட்டி போன்றது. எங்களை பொறுத்தவரை தோளில் உள்ள தூண்டை விட இடுப்பில் உள்ள வேட்டிதான் முக்கியம். எந்த நிலையிலும் பதவிக்காக யாரிடமும் சென்று நிற்க மாட்டோம். பாஜகவிற்கு எதிராக தமிழ்நாட்டில் அலை வீசுகிறது என மத்திய குழுவினரே தெரிவித்துள்ள நிலையில் அமைச்சர் சி.வி சண்முகம் சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை, என்றார்.

Intro:சென்னை ராயபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்

Body:அதிமுகவின் இரட்டை தலைமை என்பது காலம் தான் பதில் சொல்லும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து திமிங்கலம் போல் சுறா மீன்கள் போல் ஆட்சியை கலைக்க சதி செய்து வருகின்றனர்.

அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது காலம் தான் பதில் சொல்லும் அதுவும் இல்லாமல் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு எடுக்க வேண்டியது அதிமுக கட்சியின் தொண்டர்கள் தான் அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்

இப்போது உள்ள சூழலில் கட்சியில் ஏதாவது பிளவு ஏற்படாதா என்று எதிர்க்கட்சிகள் அதன் மூலம் ஆதாயம் தேட விரும்புகின்றனர்

அதிமுக கட்சியில் எந்த பிளவும் இல்லை அம முக என்று தனிக்கட்சி ஆரம்பித்து இன்று தேர்தலில் அதுவும் ஒரு செல்லா கட்சியாக மாறிவிட்டது ஆகையால் அதிமுகவில் எந்த பிளவும் இல்லை

அதிமுகவில் பிளவு ஏதுமில்லை பிளவு என்று சொன்னால் அன்று அதிமுக ஜா , ஜெ என்று இரு அணிகள் இருந்தனர் ஆனால் இன்று அப்படி இல்லை ஒரு சட்டமன்ற உறுப்பினரின் கருத்துக்கு அதிமுக தலைமை அறிக்கையை வெளியிட்டுள்ளது ஆகவே கட்சியின் எந்த பிளவும் இல்லை.

வருகிற 12-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட இருக்கிறது அதிலே அவரவர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் இது அறையிலே விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் அதிமுகவின் உட்கட்சி விவகாரம் ஒன்றை கோடி தொண்டர்கள் உள்ள கட்சியில் சின்ன சின்ன அண்ணன் தம்பிகள் பிரச்சனை வரத்தான் செய்யும்.

இன்னும் இரண்டு ஆண்டுகள் அதிமுக அரசு ஆட்சியை யாராலும் கலைக்கமுடியாது ஸ்டாலின் நினைத்தாலும் மற்றும் எதிர்க்கட்சிகள் நினைத்தாலும் அது நடக்காது ஸ்டாலின் தினமும் கனவு தான் காணமுடியும் ஆட்சியை கவிழ்க்க முடியாது

அண்ணா சொன்னதைப்போல் பதவி என்பது தோளில் உள்ள துண்டு மானம் என்பது இடுப்பில் உள்ள வேட்டி எங்களுக்கு தோலில் உள்ள துண்டை இடுப்பில் உள்ள வேட்டி தான் முக்கியம் எந்த நிலையிலும் பதவிக்காக யாருடனும் நிற்க மாட்டோம்

ஜெயலலிதா சொன்னது போல் கட்சி நூறு ஆண்டு வரை இருக்க வேண்டும் என்று இப்போது உள்ள சூழலில் படி அதிமுக தொண்டர்களின் மனநிலை தான் என்னுடைய மனநிலை எனக்கென்று தனி விருப்பம் என்று கிடையாது.

பாஜகவிற்கு எதிராக தமிழகத்தில் அலை என்று மத்திய குழுவினரே தெரிவித்துள்ளனர் எனவே அமைச்சர் சிவி சண்முகம் சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை திமுக போன்ற எதிர் கட்சிகள் மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாட்டில் தவறாக சித்தரித்து பாஜகவிற்கு எதிராக தமிழகத்தில் நிலையை உருவாகி இருப்பதற்கு காரணம்
என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்

Conclusion:சென்னை ராயபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.