சைதாப்பேட்டை மீன்வளத் துறை அலுவலகத்தில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இடைத்தேர்தலில் வெற்றியானது மக்கள் அதிமுகவுக்கு கொடுத்த தீபாவளி பரிசு. இந்த வெற்றியின் மூலம் நரகாசூரன் அழிய வேண்டும் என மக்கள் எண்ணுகின்றனர்.
மேற்குக் கடற்கரையில் மீன்பிடிக்க 294 படகுகள் சென்றுள்ளன. அவர்களுக்கு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் புயல் குறித்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 49 படகுகள் இன்னும் திரும்பவில்லை. இதுவரை வராத படகுகளை மீட்பது குறித்து அண்டை மாநிலங்களிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கைவைத்துள்ளது. கோவா பக்கம் உள்ள இரண்டு படகுகளை ஹெலிகாப்டர் மூலம் மீட்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் அளித்த வெற்றியின் மூலம் ஸ்டாலினுக்கு தகுந்த வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது என்றால், சீமான் தெருக்கோடிக்கே போய்விட்டார்" என விமர்சித்தார்.
இதையும் படிங்க: 'பிகில்' வெறியாட்டம்...! கலவர பூமியான கிருஷ்ணகிரி