சென்னை துறைமுக அலுவலக நுழைவாயில் அருகே இன்று (செப். 5) இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டன. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த அமைச்சர் ஜெயக்குமார், இதனை கண்டு உடனடியாக காரிலிருந்து இறங்கி விபத்தில் காயமடைந்த இளைஞரை மீட்டு முதலுதவி அளித்தார்.
பின்னர் ஆம்புலன்ஸை வரவழைத்து அதில் அந்த இளைஞரை ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க...வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைதான பிக்பாஸ் போட்டியாளர்!