மறைந்த பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியிருப்பது தேவையில்லாத சர்ச்சை. கடந்த காலத்தைப்பற்றி தற்போது ஆராய்ச்சி செய்ய அவசிமில்லை. ரஜினிகாந்த் இதுப்போன்ற சர்ச்சைப் பேச்சைத் தவிர்த்திருக்கலாம். இது வீணான சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் எல்லோராலும் மதிக்கப்படுகின்ற மறைந்த பெரியாரைப் பற்றி அவதூராக ரஜினிகாந்த் பேசியிருப்பது நிச்சயம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. துக்ளக் இதழின் ஒரு பக்கத்தைச் சான்றாக காட்டும் ரஜினிகாந்த், அதனை தெரியப்படுத்தி அதுகுறித்து தனது வருத்தத்தை தெரிவித்திருக்கலாம்.
அதனை மேற்கோள்காட்டி அதுகுறித்து மறக்க வேண்டும் என கூறும் அவர், அதுபற்றி பேசியிருக்க என்ன அவசியமிருக்கிறது. பெரியாரைப் பற்றிய அவரது இந்த கருத்தைப் பற்றி சிந்திக்கையில் பெரியார் எதிர்ப்பு அரசியலில் ரஜினிகாந்த் உள்நோக்கத்துடன் ஈடுபடுகிறாரா என்பதில் சந்தேகம் எழுகிறது, ஒருவேளை அது உண்மையாக இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘யோக்கியர் என்றால் துக்ளக் ஆதாரத்தைக் காட்டியிருக்க வேண்டும்’ - கொளத்தூர் மணி காட்டம்...