சென்னை பட்டினாம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கரோனா உலக நாடுகளை கட்டிப்போட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் அந்த வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த 16ஆம் தேதியன்றே வணிக வளாகங்கள், தியேட்டர்கள், மால்கள், பள்ளி, கல்லூரிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி கரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தலைமையில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.
மேலும், கரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் கூட முதலமைச்சர் கூறிய கருத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கொச்சைப்படுத்திவருகிறார். கரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. ஆனால் பாராட்ட மனமில்லாத ஸ்டாலின் முதலமைச்சரை பல்வேறு வகையில் இகழ்ந்து பேசிவருகிறார். ஏதாவது தவறு இருக்குமா என்று பூதக் கண்ணாடி வைத்து ஸ்டாலின் பார்த்து கொண்டு இருக்கிறார்” என விமர்சித்தார்.
இதையும் படிங்க...தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரணப் பொருள்கள் வழங்கத் தடை