ETV Bharat / state

அனைத்து தொகுதிகளிலும் தடுப்பணைகள் கட்டப்படும் - அமைச்சர் துரைமுருகன் - சென்னை அண்மைச் செய்திகள்

அனைத்து சட்டபேரவைத் தொகுதிகளிலும் தடுப்பணைகள் கட்டப்பட இருப்பதால், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் எந்த பகுதிகளில் தடுப்பணைகள் வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கலாம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அனைத்து தொகுதிகளிலும் தடுப்பணைகள் கட்டப்படும் - அமைச்சர் துரைமுருகன்

author img

By

Published : Aug 23, 2021, 4:36 PM IST

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் நிகழ்ந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில், இன்று (ஆக.23) நீர் வளத்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது.

அப்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மானியங்கள் மீதான கோரிக்கைக்குப் பதிலுரை அளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ''அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தடுப்பணைகள் கட்டப்பட இருப்பதால், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில், எந்தப் பகுதியில் தடுப்பணை வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கலாம்'' என்றார். மேலும் அவையில் பல அறிவிப்புகளையும் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:

  • அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படுவதன் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் 190 தடுப்பணைகள், 6 கதவணைகள், 12 அணைக்கட்டுகள் உள்பட கடைமடை வரை ஆறுகள் சீரமைக்கப்படும்.
  • மேட்டூர், அமராவதி, வைகையாறு, ராமநதி கொள்ளளவை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பிரதமரின் நீர்ப்பாசனத்திட்டத்தின்படி, 23 மாவட்டத்தில் 200 குளங்கள் புனரமைக்கப்படும். 31 மாவட்டங்களில் 207 ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், அவற்றின் கட்டுமானங்கள் நபார்டு நிதியுதவியுடன் படிப்படியாக மேற்கொள்ளப்படும்.
  • புதிய பெரிய 7 நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 50 குறு நீர் பாசன குளங்கள் தரம் உயர்த்தப்படும்.
  • திருவண்ணாமலை, விழுப்புரம், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 8 புதிய கால்வாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • புயல், பெருமழை காலங்களில் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை களையும் பொருட்டு திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சென்னை மாவட்டங்களில் 16 தூண்டில் வளைவு கதவணைகள், கடல் அரிப்பு தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர், இன்று (ஆக.23) தொடங்கி வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி வரை மானியங்கள் மீதான கோரிக்கை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எனக்கு எல்லாமுமே கருணாநிதிதான் - கண்கலங்கிய துரைமுருகன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.