சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு அதிமுகவின் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதுதான் எங்களது நிலைபாடு” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. திமுக தேர்தலை கண்டு அஞ்சி தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதற்காகப் பல முயற்சிகளைச் செய்துவருகிறது. மேலும் பல்வேறு வகைகளில் நீதிமன்றத்தை நாடி தடுப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றது. உச்ச நீதிமன்றம் தேர்தலை நடத்தலாம் என்று உத்தரவிட்டிருக்கிறது அதன்படி தேர்தல் நடக்கும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க...பனிச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு!