சென்னை: சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. இந்த விவாதத்திற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றனர்.
இன்று நடைபெற்ற கூட்டத்தொடரின்போது அர. சக்கரபாணி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை பொது விநியோக அமைப்பு (பிடிஎஸ்) மூலம் செயல்படுத்தப்படும் என்பதையும் அர. சக்கரபாணி குறிப்பிட்டார். இதனிடையே இல்லத்தரிசிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்த கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு மசோதா தாக்கல்