சென்னையில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. சென்னையில் மட்டும் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையும் மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நோய்த்தொற்று குறையாமல் இருக்கும் குறிப்பிட்ட பகுதிகளான தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர் போன்றப் பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.
மொத்தம் ஒரு லட்சத்து நான்காயிரத்து 27 நபர்கள் இந்த கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 89ஆயிரத்து 969 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 11 ஆயிரத்து 856 நபர்கள் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
15 மண்டலங்களிலும் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500-க்கும் கீழ் உள்ளது. குணமடைந்தவரின் விழுக்காடு அதிகரித்து வருகிறது. 30 முதல் 39 வயது உடையவர்கள் அதிக அளவில் (18.48 விழுக்காடு) பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் கரோனா நோய் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருபவர்களில் மண்டலவாரியான நிலைப் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
கோடம்பாக்கம் - 1,349 பேர்;
அண்ணா நகர் - 1,198 பேர்;
ராயபுரம் - 796 பேர் ;
தேனாம்பேட்டை - 804 பேர்;
தண்டையார்பேட்டை - 645 பேர்;
திரு.வி.க. நகர் - 952 பேர்;
அடையாறு -1,012 பேர்;
வளசரவாக்கம் - 900 பேர்;
அம்பத்தூர் - 1,401 பேர்;
திருவொற்றியூர் - 423 பேர்;
மாதவரம் - 568 பேர்;
ஆலந்தூர் - 520 பேர்;
சோழிங்கநல்லூர் - 482 பேர்;
பெருங்குடி - 484 பேர்;
மணலி - 89 பேர்
மேலும் இரண்டாயிரத்து 202 நபர்கள் இந்த தொற்றினால் இறந்துள்ளனர்.