ETV Bharat / state

சென்னையில் நில அதிர்வா? குலுங்கிய கட்டடங்கள் - சென்னையில் நில அதிர்வா

Chennai Earthquake: அண்ணாசாலையில் உள்ள குடியிருப்புகளில் திடீர் அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்து வெளியில் ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில் மெட்ரோ பணிகள் நில அதிர்வுக்கு காரணம் இல்லை என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 22, 2023, 1:19 PM IST

Updated : Feb 22, 2023, 3:09 PM IST

அண்ணா சாலையில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் கட்டடங்களில் இருந்து வெளியேறினர்

சென்னை: சென்னை அண்ணாசாலை அருகே ஒயிட்ஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ள இரண்டு குடியிருப்புகளில் இன்று (பிப்.22) காலை 10 மணிக்கு திடீரென நில அதிர்வு (Chennai Earthquake) ஏற்பட்டதாக கூறி குடியிருப்புகளில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் பதறியடித்து கட்டடத்தின் வெளியே ஓடி வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், அந்த பகுதி தவிர வேறு எந்த பகுதியிலும் நில அதிர்வு ஏற்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் அருகே நடைபெறும் மெட்ரோ பணிகள் காரணமாக நில அதிர்வு ஏற்பட்டதாக குற்றம்சாட்டினர். இதனையடுத்து மெட்ரோ பணி அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டபோது மெட்ரோ பணிகள் காரணமாக நில அதிர்வு ஏற்படவில்லை எனத் தெரியவந்தது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ முதன்மை பொது மேலாளர் லிவிங்ஸ்டனிடம் தொலைபேசி வாயிலாக கேட்டபோது, "சென்னையில் இரண்டாம் கட்ட பணிகளில் சுரங்கம் தோண்டும் பணி என்பது மாதவரத்தில் மட்டுமே நடைபெறுவதாகவும், அண்ணா சாலையில் எவ்வித சுரங்கம் தோண்டும் பணிகளும் நடைபெறவில்லை" எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மாதவரத்தில் நடைபெற்று வரும் சுரங்கம் தோண்டும் பணியின் போதும் மெட்ரோ கண்காணிப்பு குழு சுரங்கம் தோண்டும் பணியின்போது, 100 மீட்டர் தொலைவுகளில் நில அதிர்வுகள் ஏற்படுகிறதா? என்பது குறித்து நவீன கருவிகள் மூலம் தொடர்ந்து 24 மணிநேரமும் கண்காணித்து வருவதாகவும், தற்போது வரை மாதவரத்தில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வரும் பகுதிகளில் அது போன்று எந்தவித நில அதிர்வுகளையும் கண்டறியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உறுதியாக மெட்ரோ பணிகளால் இந்த நில அதிர்வு ஏற்பட்டிருக்காது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், பிரபல மோட்டார் நிறுவனத்தின் கட்டடத்தினை இடிக்கும் பணியானது அங்கு நடைபெற்று வருவதால், இதன் காரணமாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளதா எனவும் அண்ணாசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அனுமதியின்றி ஊர்வலம் சென்ற அண்ணாமலை உட்பட 3ஆயிரம் பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

Last Updated : Feb 22, 2023, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.