ETV Bharat / state

அரசு இணையதளங்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடிகிறதா? - உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: அரசு இணையதளங்கள் மின்னணு மூலம் வழங்கும் சேவைகளை மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
MHC
author img

By

Published : Dec 14, 2020, 7:14 PM IST

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளை சார்ந்த பல துறைகள், இணையதளங்கள், மொபைல் செயலிகள் மூலம் சேவைகளை வழங்கி வருகின்றன.

இந்த டிஜிட்டல் பந்தயத்தில் பங்கேற்றுள்ள தமிழ்நாடு அரசும், 92 பணிகளை இ-சேவை மூலமாக மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்த சேவைகள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் இல்லை எனக் கூறி, வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ”அரசுப் பணியாளர் தேர்வாணையம், இந்தியன் ரயில்வே உள்ளிட்ட இணையதளங்கள், காவல்துறையின் காவலன் உள்ளிட்ட செயலிகள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் முறையில் அமைக்கப்படவில்லை.

தேர்வாணைய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும், ரயில்வே முன்பதிவு படிவங்களை பூர்த்தி செய்வதற்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றொருவரின் உதவியை நாட வேண்டிய நிலையே இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குறைகளைக் களைந்து மத்திய, மாநில அரசுகளின் இணையதளங்களையும், மொபைல் செயலிகளையும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

இதையும் படிங்க:கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீடு: மாணவர்களின் கல்வி செலவுக்காக 2019-20ஆம் ஆண்டில் ரூ.375 கோடி ஒதுக்கீடு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.