ETV Bharat / state

Harkara movie: ஹர்காரா படம் "ஓட்டத் தூதுவன் 1854" படத்தின் காப்பியா - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நீதிமன்றம்!

"ஹர்காரா" படத்தின் கதை, இயக்குநர் சிதம்பரத்தின் "ஓட்டத் தூதுவன் 1854" படத்தின் கதை என வழக்கு தொடரப்பட்ட நிலையில், படத்தில் சிதம்பரத்திற்கான அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும் என்றும் படத்தின் வருவாயில் பங்கு கொடுக்க அவசியமில்லை என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

"ஹர்காரா" பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நீதிமன்றம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 5:19 PM IST

சென்னை: "ஹர்காரா" படத்தின் அசல் கதை "ஓட்டத் தூதுவன் 1854" படத்தினுடையது என்கிற வாசகத்தை இடம் பெறச்செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், படத்தின் மூலம் ஈட்டப்படும் வருவாயில் எந்த பங்கும் வழங்க வேண்டியது இல்லை என்று மனுதாரருக்கு தெளிவுபடுத்தி உள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஆர்.சிதம்பரம். இவர் பல திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரின் பணி அனுபவத்தில், நாட்டின் முதல் அஞ்சல்காரர் குறித்த "ஓட்டத் தூதுவன் 1854" என்ற கதையை எழுதி, திரைப்படமாகவும் உருவாக்கினார். தனது கதையை சென்னை முகப்பேரை சேர்ந்த தயாரிப்பாளர் ராம் அருண் காஸ்ட்ரோ என்பவரிடம் கூறி, அவரையே அப்படத்திற்கு கதாநாயகனாகவும் வைத்து படமாக எடுக்கப்பட்டது.

படத்திற்கு இருவரும் உரிமையாளர்கள் என 2014ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு உருவான படம், 2016ல் பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று பெரும் வரவேற்பை பெற்றது. என்னதான் பல்வேறு தரப்பினரிடமிருந்து வரவேற்புகள் பெறப்பட்டிருந்தாலும், இதுவரை ஒரு திரையரங்குகளில் கூட இந்தத் திரைப்படம் வெளியாகவில்லை.

இந்த நிலையில் "ஓட்டத் தூதுவன் 1854" படத்தின் அதே கதைkகளத்தை வைத்து, "ஹர்காரா" என்கின்ற படத்தை எடுத்துள்ளார் என்று சிதம்பரம், தயாரிப்பாளர் அருண் காஸ்ட்ரோ மீது குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவர் இந்தப் படம் தன்னுடைய கதை மற்றும் திரைக்கதை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆஷா அமர்வில் இன்று(ஆக.26) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.வி.விஜய் பிரசாந்த் ஆஜராகி வாதிட்டார். அப்போது, "கதை, திரைக்கதை - ஆர்.சிதம்பரம்" என்று குறிப்பிடாமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

பின்னர் நீதிபதி, "ஹர்காரா படத்தின் எழுத்துகள் ஒளிபரப்பும் போது, ஹர்காரா படம் ஆர்.சிதம்பரம் எழுதிய ஓட்டத் தூதுவன் 1854 திரைப்படத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என்கின்ற வாசகத்தை ஆங்கிலம் மற்றும் அந்தந்த மொழிகளில் இடம்பெறச் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

மேலும், "ஒடிடி தளத்தில் வெளியிடும் போதும் இந்த வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்றும், படத்தின் மூலம் ஈட்டப்படும் வருமானத்தில் சிதம்பரத்திற்கு எந்த பங்கையும் வழங்க வேண்டியது அவசியமில்லை" என்றும், ராம் அருண் காஸ்ட்ரோவிற்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: கக்கன் திரைப்படம்: "இளைய சமுதாயத்துக்கு நல்ல படம்" கக்கனின் பேத்தி நெகிழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.