ETV Bharat / state

குரூப் 4 பணியிடங்களுக்கான கல்வித் தகுதியைப் பரிசீலனை செய்யத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 3:18 PM IST

Group 4 Educational Qualification: குரூப் 4 பணியிடங்களுக்கான குறைந்த மற்றும் அதிகபட்சமான கல்வித்தகுதியை நிர்ணயிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC directs the state government to amend group 4 educational qualification
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: திருச்சியைச் சேர்ந்த சதீஷ்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2020ஆம் ஆண்டு 135 சமையல் கலைஞர்கள் பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு வெளியிட்டது. தகுதிகளாக, பத்தாம் வகுப்பு தோல்வி, தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, 2021இல் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில், திடீரென அதிக கல்வித்தகுதி இருப்பதாகக் கூறி பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, பணியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சதீஷ்குமார் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன், பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பதை அதிக கல்வித்தகுதியாகக் கருத முடியாது. அதனால், அதிக கல்வித்தகுதியுடன் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்துக்கான சிறப்பு விதிகளின் படி அதிக வயதுடையவர்களை பணியில் நியமிக்கலாம் என்ற உத்தரவு சட்ட விரோதமானதாக அறிவிக்கப்படுகிறது.

அவ்வாறு பணியில் நியமிக்கப்பட்டிருந்தால் அது சட்டவிரோதமாகக் கருதப்படும். தொடர்ந்து பணியில் நீட்டிக்கவும் உரிமை இல்லை. தமிழக அரசு குரூப் 4 பணியிடங்களுக்கான குறைந்த மற்றும் அதிகபட்சமான கல்வித்தகுதியை நியமிக்க வேண்டும். விரைவாக நடவடிக்கை எடுப்பதன் மூலமாகப் புறக்கணிப்பு மற்றும் சமவாய்ப்புகள் மறுக்கப்படுவது தடுக்கப்படும் என நீதிமன்றம் நம்புவதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஸ்டார்ட் அப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.