ETV Bharat / state

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம்!

author img

By

Published : Oct 16, 2019, 12:01 AM IST

Updated : Oct 16, 2019, 8:37 AM IST

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

cm edappadi palanisamy

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுக இரு அணிகளாக பிளவுற்றது. ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும், சசிகலா ஒரு அணியாகவும் தனித்து செயல்பட்டனர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக வர சசிகலா விரும்பினார். இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வர எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றார்.

2017ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி தமிழ்நாட்டின் ஏழாவது முதலமைச்சராக பதவியேற்றார். மக்களுக்கு பரிட்சயம் இல்லாத முகம் என எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டார். ஆளுமைப் பண்பு இல்லாதவர் என்றும் கட்சியை வழிநடத்த தெரியாத அதிமுக முதலமைச்சர் எனவும் விமர்சிக்கப்பட்டார். இவரது ஆட்சி பத்து நாள் கூட தாங்காது . ஆறுமாதம் தாக்கு பிடிப்பதே கடினம் என்று வார்த்தை ஜாலங்களால் நாளொரு வண்ணம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தார்.

இந்த நிலையில் கட்சியையும், ஆட்சியையும் திறம்பட வழிநடத்தி வருகிறார். இவரது செயல் திறனை கண்டு எதிர்க்கட்சி தலைவர்களும் சில நேரங்களில் பாராட்டி வருகின்றனர். சிறந்த நிர்வாகியாகவும் மக்களவைத் தேர்தலில் அதிரடி கூட்டணி முடிவுகள் என பல செயல்களை புரிந்துள்ளார். மக்களுக்கான நல்ல நல்ல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். மத்திய அரசுடனும் முரண்டு பிடிக்கவில்லை. இணக்கமாகவே அரசியல் புரிந்து வருகிறார்.

முதலமைச்சருக்கு டாக்டர் பட்டம்
முதலமைச்சருக்கு டாக்டர் பட்டம்

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த கௌரவ டாக்டர் பட்டம் வருகிற 20ஆம் தேதி வழங்கப்பட இருக்கிறது. இதனை பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் முன்னாள் எம்பியுமான ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் அரசியல் தலைவர்களுக்கும் டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்கப்படுகிறது. அண்மையில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அரசியல் தலைவர்களான அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றோர் வரிசையில் தற்போது எடப்பாடி பழனிசாமியும் இடம்பிடித்துள்ளார்.

மேலும், அதிமுகவில் முதலமைச்சர்களாக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு டாக்டர் பெறும் மூன்றாவது நபர் என்ற சிறப்பையும் எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார்.

Intro:Body:

டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வரும் 20 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.

http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73232-dr-mgr-educational-research-institute-founded-by-ac-shanmugam-is-conferring-an-honorary-d-litt-doctor-degree-on-cm-palanisami-at-its-convocation-on-oct-20.html

Conclusion:
Last Updated : Oct 16, 2019, 8:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.