ETV Bharat / state

மெட்ரோ தண்ணீருக்கு ஆன்லைன் பதிவு மும்முரம்! - metro water online booking engaged

சென்னை: கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் சென்னைவாசிகள் ஆன்லைனில் மெட்ரோ தண்ணீரை முன் பணம் செலுத்தி பதிவு செய்து பெற்று வருகின்றனர்.

Chennai Metro Water
மெட்ரோ தண்ணீருக்கு ஆன்லைன் பதிவு மும்முரம்
author img

By

Published : Apr 1, 2021, 10:28 PM IST

சென்னையில் வசிப்பவர்களுக்கு மெட்ரோ நீரை பெறுவதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் 600க்கும் மேற்பட்ட ஒப்பந்த லாரிகளை இயக்கி குடிசை பகுதிகளில் வாழும் மக்களுக்கும் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கும் இலவசமாக குடிநீர் விநியோகம் செய்து வருகிறது.

கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், சென்னை நகர மக்கள் மற்றும் பெரும் நிறுவனங்கள் முன் பணம் செலுத்தி குடிநீர் பெறலாம் என்ற வாய்ப்பை கடந்த வருடம் ஏற்படுத்தி கொடுத்த நிலையில், ஆன்லைன் பதிவு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக கள நிலவரத்தைத் தெரிந்து கொள்ள குடிநீர் வாரிய அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ’இந்த ஆன்லைன் பதிவு மூலம் நிறுவனங்கள் 9 ஆயிரம், 12 ஆயிரம் மற்றும் 16 ஆயிரம் லிட்டர் தண்ணீரை பெற்று கொள்ளலாம்.

கடந்த ஆண்டு பெய்த நல்ல மழையினால், ஏரிகளில் நீர் இருப்பு போதுமான அளவு உள்ளது. எனவே நுகர்வோர்கள் தங்கு தடையின்றி முன் பதிவு செய்து குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும்’ என்றார்.

இது போக அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும் நுகர்வோர்கள் 3 ஆயிரம், 6 ஆயிரம் மற்றும் 9 ஆயிரம் லிட்டர் குடிநீரைப் பதிவு செய்து பெற்று கொள்ளலாம். குடிசைப் பகுதிகளில் வாழும் பகுதிகளில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் தினந்தோறும் நிரப்பப்படுகிறது.

இதனை பகுதி குடிநீர் வாரிய பொறியாளர்கள் கண்காணித்து வருகிறார்கள். சென்னைவாசிகள் ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலவரப்படி நீர் இருப்பை பொறுத்த வரை, சென்னை மெட்ரோ ஏரிகளில் 9,337 மில்லியன் கியூபிக் பீட் (mcft) உள்ளது. மொத்த நீர் கொள்ளளவு 11.3 மில்லியன் கியூபிக் பீட் இருந்தால் ஒரு ஆண்டு முழுவதும் குடிநீர் பஞ்சம் இருக்காது என்பது பொதுவான கருத்து. அந்த வகையில் பார்க்கும்போது, இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்பது உறுதியாகியுள்ளதா குடிநீர் வாரிய அலுவலர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:'தவசி மகன் வார்த்தை மாற மாட்டேன்'- பஞ்ச் வசனம் பேசி வாக்கு சேகரித்த விஜயபிரபாகரன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.