சென்னையில் மெட்ரோ லாரி தண்ணீர் விலை உயர்தப்பட்டுள்ளதாக மெட்ரோ வாட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் 9 ஆயிரம், 12 ஆயிரம், 16 ஆயிரம் லிட்டர்கள் உள்ள தண்ணீர் லாரிகளையும், தனி வீடுகளில் வசிப்பவர்கள் 3 ஆயிரம், 6 ஆயிரம், 9 ஆயிரம் லிட்டர்கள் உள்ள தண்ணீர் லாரிகளையும் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
அந்த வகையில் 6 ஆயிரம் லிட்டர் குடிநீர் ரூ. 435க்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ. 499 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ. 700க்கு விற்பனை செய்யப்பட்ட 9 ஆயிரம் லிட்டர் குடிநீர் ரூ. 735 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வணிக ரீதியாக லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரின் விலையையும், சென்னை குடிநீர் வாரியம் உயர்த்தியுள்ளது. அதன்படி 3 ஆயிரம் லிட்டர் ரூ. 500 ஆகவும், 6 ஆயிரம் லிட்டர் ரூ. 735 ஆகவும், 9 ஆயிரம் லிட்டர் ரூ. 1050 ஆகவும், 12 ஆயிரம் லிட்டர் ரூ.1400 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க: