இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
மத்திய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும். இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வானது அடுத்த 36 மணி நேரத்தில் வலுப்பெற்று புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனத்தால் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், தெற்குக் கடலோரத் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தொடர்ந்து ஏப்ரல் 29ஆம் தேதி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், புதுக்கோட்டை கீரனூரில் 5 செ.மீ. மழையும், வால்பாறையில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.