சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பெட்டி கடைகள் நடத்தி வரும் சிறு வியாபாரிகள் காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், "திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு காவலராகப் பணியாற்றிவரும் மணிமாறன் என்பவர் தினமும் சிறு வியாபாரிகளிடம் போதைப் பொருள் விற்பதாகக் கூறி அறிக்கை அனுப்பி கடையை மூடிவிடுவேன் என்று மிரட்டி மாதம் ஆயிரம் ரூபாய் மாமூல் வசூல் செய்து வருகின்றார்.
மாமூல் வசூல்
இதுமட்டுமில்லாமல் பாஸ்போர்ட் ஆய்விற்காக போது சம்மந்தப்பட்ட நபர் வீட்டிற்குச் சென்று மிரட்டி 5 ஆயிரம் ரூபாய் மாமூல் வசூலிக்கிறார். மேலும் கல்லறை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வரும் அருப்பு லட்சுமி, காஞ்சனா ஆகியோரிடமும் மாமூல் வாங்கி கொண்டு கண்டும் காணாமல் போய்விடுகின்றார். இதேபோல், திருவல்லிக்கேணியில் விடுதியில் தங்கி குருவியாகச் செயல்படும் நபர்களை கண்டறிந்து அவர்களிடமும் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றார்.
நடவடிக்கை
நுண்ணறிவு காவலர் மணிமாறனை போல், உதவி ஆய்வாளர் மருதுவும் கடையில் மாமூல் வசூல் செய்ய அண்ணா தியேட்டர் மேலாளர் வெங்கட் என்பவரை நியமித்து மாமூல் வசூல் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
எனவே நுண்ணறிவு காவலர் மணிமாறன், உதவி ஆய்வாளர் மருது ஆகியோரிடம் துறை ரீதியிலான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தனர்.
உதவி ஆணையர் உடந்தை
இதுபோல் நுண்ணறிவு காவலர் மணிமாறன் ஊழல் புகாரில் பல முறை சிக்கியபோது நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் சார்லஸ் அவரை காப்பாற்றி வருவதுடன் மேல் அலுவலர்களுக்கு இந்த புகார் தொடர்பான தகவல்களை தெரிவிக்காமல், இது போன்ற காவலர்களை காப்பாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மளிகை கடையில் மாமூல் கேட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது!