ETV Bharat / state

தடுப்பூசி தட்டுப்பாடு... மெகா தடுப்பூசி முகாம் தேதி மாற்றம்! - chennai district news

வரும் செப்.17ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 19ஆம் தேதி முகாம் மாற்றப்பட்டுள்ளது.

தடுப்பூசி தட்டுப்பாடு
தடுப்பூசி தட்டுப்பாடு
author img

By

Published : Sep 15, 2021, 3:37 PM IST

சென்னை: தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவத் தகவல் மற்றும் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு மன நல ஆலோசனை மையத்தை மருத்துவம், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களிடம் உரையாடுவதற்கு இந்த ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக நீட் தேர்வு எழுதியவர்களின் பட்டியலை பெற்று அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் கட்டளை அறை மூலம் ஆலோசனை வழங்கப்படும்.

இதற்காக 333 மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 40 மனநல ஆலோசகர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை. நீட்தேர்வை இரண்டு முறைக்கு மேல் எழுதியவர்களுக்கு இந்த ஆலோசனை வழங்கப்படும்.

19ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்

108 சேவை தொடங்கி 13 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இந்த நாள்களில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. 17ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அது 19ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது.

மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். 19ஆம் தேதி கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறேன்.

அமைச்சர் மா சுப்பிரமணியன்
அமைச்சர் மா சுப்பிரமணியன்

20 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசி போட இலக்கு

அன்று 20 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசி போட இலக்கு வைத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் 52 விழுக்காடு நபர்களுக்கு தடுப்பூசி முதல் தவணை போடப்பட்டுள்ளது. 48 விழுக்காடு நபர்கள் முதல் தவணை தடுப்பூசி கூட போடவில்லை. இந்தியாவில் அதிக அளவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான்.

அதுமட்டுமின்றி இரண்டாயிரத்து 623 ஆதரவற்றவர்களுக்கும், 1,754 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துடனும், சுகாதார அலுவலர்களுடனும் முதலமைச்சர் இன்று (செப்.15) ஆலோசனை நடத்தவுள்ளார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி- பாமக திடீர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.