இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் மூலம் உயிரியல் மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து சுகாதார வசதி மருத்துவமனைகள், கால்நடை மருத்துவமனைகள், ரத்த வங்கிகள், ஆய்வகங்கள், தடுப்பு மையங்கள், பள்ளிகளில் உள்ள முதல் உதவி மையங்கள், ரத்த பரிசோதனை மையங்கள், நோயியல் ஆய்வகங்கள், ஆயுஷ் மருத்துவமனைகள் என அனைத்திலும் மருத்துவ கழிவுகளை முறையாக கையாண்டு அந்தந்த மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று அப்புறப்படுத்த வேண்டும்.
மருத்துவ கழிவுகள் அந்தந்த வளாகத்திலேயே முறையாக சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்ற வழி வகையும் உள்ளது. இதற்காக சென்னை புறநகர் பகுதிகளில் இரண்டு பொதுமருத்துவ திடக்கழிவு மையங்கள் செயல்பட்டுவருகின்றன. இருப்பினும் சென்னை புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மருத்துவ கழிவுகள், காலாவதியான மாத்திரை, மருந்து, குப்பைகளுடன் சேர்த்து கொட்டப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.
இதன் அடிப்படையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மருத்துவ திடக்கழிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் மருத்துவ கழிவுகளை பொதுமருத்துவ திடக்கழிவு மையங்களுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.
தவறும்பட்சத்தில் அந்த நிறுவனங்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986இன்படி மூடுதல், மின் இணைப்பு துண்டித்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மருத்துவ கழிவுகளை நிலத்திலோ, நீரிலோ கொட்டி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால் அவர்களிடமிருந்து சுற்றுச்சூழல் இழப்பீடு தொகை பெறப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
பணத்திற்காக குழந்தையை விற்றுவிட்டு விசாரணைக்கு வர மறுத்த தம்பதி: போலீஸ் வலைவீச்சு!