Central team arrives in Chennai: இந்தியாவில் 420க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய ஒன்றிய அரசு மருத்துவக் குழுவை அனுப்பி வைத்துள்ளது.
மருத்துவர்கள் வனிதா, புர்பசா, சந்தோஷ் குமார், தினேஷ் பாபு ஆகிய நான்கு பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் டெல்லியிலிருந்து விமான மூலம் நேற்று (டிச. 27) சென்னை வந்தனர்.
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் நிலை, தடுப்பூசி மற்றும் மருத்துவக் கட்டமைப்புக் குறித்து இன்று (டிச. 27) காலை மருத்துவத்துறை அமைச்சர், செயலர் உள்ளிட்டோரிடம் மருத்துவக் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு சென்றனர். அங்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு பரிசோதனைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
பின்னர் கிண்டி கிங்ஸ் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றனர்.
இதையும் படிங்க: Competitive examination: அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி