தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அஸ்வத் நாராயணன் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், ”கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக சில மருத்துவப் பிரிவு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைப்புக் கல்லூரிகளில், பிஎஸ்சி (ஆயுஷ்), பி.ஆப்டோமெட்ரி (B.optometry), பி.ஏ.எஸ்.எல்.பி., மருத்துவம் சார்ந்த துணை பட்டயப் படிப்புகள், எம்.எஸ்.சி. கண் மருத்துவம், எம்.ஏ.எஸ்.எல்.பி., முதுநிலை மருத்துவமனை நிர்வாகம், முதுநிலை மருத்துவம் சார்ந்த துணை பட்டயப் படிப்புகள் ஆகிய பிரிவுகளில் படிப்போருக்கு மார்ச் 31ஆம் தேதி வரை முழுமையாக விடுமுறை அளிக்கப்படுகிறது.
மருத்துவம் சார்ந்த துணை பட்டயப் படிப்புகளில் செய்முறை, நடைமுறை தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நடைபெறும். இதில் எவ்வித மாற்றமுமில்லை. இந்த நடைமுறை தேர்வுகள் நடைபெறும் கல்வி நிறுவனங்களில், மத்திய, மாநில அரசுகள் வழங்கியிருக்கும் பொதுநல அறிவிப்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மீன்களையும் விட்டு வைக்காத கரோனா வதந்தி - கலக்கத்தில் மீனவர்கள்!