ETV Bharat / state

'மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு...!' - இடஒதுக்கீடு

சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு மருத்துவ கவுன்சில் விதிகளில் திருத்தம் கொண்டுவந்து, தமிழ்நாடு அரசு அதனை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

raveendranath
author img

By

Published : Jun 6, 2019, 6:29 PM IST

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நீட் நுழைவுத் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் உயிரிழந்துள்ளதால், அவர்கள் இறப்பிற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் மாநில அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் அதிலிருந்து எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்கள்? என கேள்வி எழுப்பிய ரவீந்திரநாத், அதன் விவரத்தினை வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆயுஷ் படிப்பிற்கும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ரவீந்திரநாத், அதற்கு தமிழ்நாடு அரசு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் சுமார் 6,500 மருத்துவ இடங்கள் உள்ளது என குறிப்பிட்ட ரவீந்திரநாத், ஆனால் அதில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பயன் பெற முடியவில்லை என வேதனை தெரிவித்தார்.

அதேபோல் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் 490 மருத்துவ இடங்களில் வெளிமாநில மாணவர்கள் பயில்வதாக சுட்டிக்காட்டிய அவர், அதே நேரத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை அரசு மருத்துவக் கவுன்சில் விதிகளில் மாற்றம் செய்து பெறுவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் ரவீந்திரநாத்

மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் சூழ்ச்சி நடைபெற்றுள்ளதாக ரவீந்திரநாத் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

Intro:மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு

Body:சென்னை, மருத்துவ படிப்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கு மருத்துவ கவுன்சில் விதிகளில் திருத்தம் கொண்டுவந்து தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்த வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்தரநாத் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நீட் நுழைவுத் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சார்ந்த இரண்டு மாணவிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் இறப்பிற்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் . மேலும் குடும்பத்திற்கு 50 லட்சம் மாநில அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை. இதனால்தான் மாணவிகள் தற்கொலையும் நடைபெற்றுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் அதிலிருந்து எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்கிறார் விபரத்தினை வெளியிட வேண்டும்.
ஆயுஷ் படிப்பிற்கும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதற்கு தமிழக அரசு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் சுமார் 6,500 மருத்துவ இடங்கள் உள்ளது ஆனால் அதில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பயன் பெற முடியவில்லை. அதேபோல் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் 490 மருத்துவ இடங்களில் வெளி மாநில மாணவர்கள் பயில்கின்றனர்.
மருத்துவ படிப்பில் இருந்து விலக்கு பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே நேரத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 50 சதவீத ஒதுக்கீட்டை தமிழக அரசு மருத்துவக் கவுன்சில் விதிகளில் மாற்றம் செய்து பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.
அதேபோல் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது . அதில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளது. இதனால் இட ஒதுக்கீட்டு மாணவர்கள் பாதிப்படைவார்கள் எனவே தமிழகத்தில் உள்ள அனைவரும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.