ETV Bharat / state

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிவு அறிவிப்பு! - BDS Second Round counselling Result

MBBS BDS Second Counselling finished: எம்பிபிஎஸ், பிடிஎஸ் இரண்டாம் சுற்று கலந்தாய்வின் முடிவு அறிவிப்பை மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ்:  இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிவு அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 10:37 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் அனைத்து இடங்களும் நிரம்பின எனவும், தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் வெளிநாட்டினருக்கான ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்களில் 87 இடங்கள் காலியாக உள்ளதாகவும், பல் மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 156 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 87 இடங்களும் நிரம்பாமல் உள்ளன என மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை முதல் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் காலியாக இருந்த இடங்களுக்கு நடத்தப்பட்ட இரண்டாம் சுற்று கலந்தாய்வின் இறுதி ஒதுக்கீடு ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அனைத்து இடங்களும் நிரம்பியது. நிர்வாக ஒதுக்கீட்டில் என்ஆர்ஐ மாணவர்களுக்கான இடங்களில் சேராமல் 82 இடங்கள் காலியாக உள்ளது. அதேபோல் பிடிஎஸ் படிப்பில் 3 அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் காலியிடங்கள் எதுவும் இல்லை.

தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் பல் மருத்துவப் படிப்பில் 156 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 87
இடங்களும் காலியாக உள்ளது என மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் சுற்று கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தரவரிசைப் பட்டியல் ஒன்று முதல் 25,856 பெற்ற மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு பிரிவிற்கு தரவரிசை பட்டியல் ஒன்று முதல் 13,179 பெற்ற மாணவர்களும் ஆகஸ்ட் 21, 22 ஆகிய தேதிகளில் பதிவு செய்தனர். ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மாணவர்கள், தாங்கள் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்தனர்.

இரண்டாம் சுற்று கலந்தாய்வில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 119 இடங்களும், என்ஆர்ஐ மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் உட்பட 648 இடங்கள் காலியாக உள்ளன. 767 இடங்கள் காலியாக இருந்தது.

பிடிஎஸ் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் 85 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 818 இடங்களும் காலியாக உள்ளன. இதற்கு முன் 903 இடங்கள் காலியாக இருந்தது. முதல் சுற்று கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்த மாணவர்களும் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அனைத்து இடங்களும் நிரம்பியது. நிர்வாக ஒதுக்கீட்டில் என்ஆர்ஐ மாணவர்களுக்கான இடத்தில் சேராததால் இருந்த இடங்களில் சேராமல் 82 இடங்கள் காலியாக உள்ளது. அதேபோல் பிடிஎஸ் படிப்பில் 3 அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் காலியிடங்கள் எதுவும் இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் பல் மருத்துவப் படிப்பில் 156 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 87 இடங்களும் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கு 7,612 மாணவர்களுக்கும், தனியார் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கு 1,475 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரசு மருத்துவக் கல்லூரியில் நிழற்குடை இன்றி நோயாளிகள் அவதி!

2023 – 2024ஆம் ஆண்டின் இளநிலை மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம்(BDS) ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில்
உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரையில் 40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது.

2023 - 2024ஆம் ஆண்டிற்கான அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் படிப்பில் 6,326 இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்பில் 1,768 இடங்களும் நிரப்பப்பட உள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் உள்ள இடங்களில் சேர்வதற்கு ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரையில் தரவரிசை எண் 1 முதல் 25,856 வரையிலும், நீட் தேர்வு மதிப்பெண் 720 முதல் 107 மதிப்பெண் வரை பெற்றவர்கள் விரும்பும் கல்லூரியை பதிவு செய்தனர்.

அதேபோல் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் உள்ள இடங்களில் சேர்வதற்கு ஜூலை 25 ந் தேதி முதல் ஆகஸ்ட் 3 தேதி வரையில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான தரவரிசை எண் 1 முதல் 13,179 வரையிலும், நீட் தேர்வு மதிப்பெண் 720 முதல் 107 மதிப்பெண் வரை பெற்றவர்கள் பதிவு செய்தனர்.

இவர்களுக்கான இடங்கள் ஆகஸ்ட் 4,5 ஆகியத் தேதிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 6ம் தேதி கல்லூரியின் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 11ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் .
அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ்,பிடிஎஸ் அரசு ஒதுக்கீட்டில் 7612 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 1475 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பஞ்சமி நில வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.