சென்னை : இளநிலை மருத்துவ சேர்க்கையில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்குகிறது. பொது தரவரிசை 1 முதல் 10 ஆயிரத்து 456 வரை இடம்பெற்றிருக்கக் கூடிய மாணவர்கள், அதாவது நீட் மதிப்பெண் 710 முதல் 410 வரை பெற்றிருக்கக் கூடிய மாணவர்கள் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
இந்த மாணவர்கள் இன்று காலை 10 மணி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி மாலை 5 மணி வரைக்குள் கலந்தாய்வுக்கான கட்டணம் 500 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும், பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 8 மணி முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகள் உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்பு
இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 7ஆம் தேதி மாணவர்கள் சான்றிதழ் சரிபார்க்க அழைக்கப்படுவார்கள். பிப்ரவரி 8, 9, 10 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். மருத்துவ கல்வி இயக்குநரகம் குறிப்பிடும் மையங்களுக்கு மாணவர்கள் நேரில் சென்று உரிய சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து, முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கான முடிவுகள் பிப்ரவரி 15ஆம் தேதி வெளியிடப்படுகின்றன. மாணவர்களுக்கு எந்தெந்த கல்லூரி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்ற விவரம் 15ஆம் தேதி தெரிந்துவிடும்.
ஒதுக்கீடு ஆணை பெறக்கூடிய மாணவர்கள் தங்களது ஆணையை பிப்ரவரி 16ஆம் தேதி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பிப்ரவரி 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிக்குச் சென்று சேர வேண்டும்.
எத்தனை இடங்கள்
அரசு மருத்துவ கல்லூரிகளில் பொதுபிரிவுல் 3 ஆயிரத்து 995 சீட்களும், சுயநிதி கல்லூரிகளில் ஆயிரத்து 390 சீட்களும், அரசு பிடிஎஸ் கல்லூரியில் 157 சீட்களும், சுயநிதி பிடிஎஸ் கல்லூரிகளில் 1,166 சீட்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின்கீழ் அரசு மருத்துவ கல்லூரியில் 324 சீட்களும், சுயநிதி கல்லூரியில் 113 சீட்களும், அரசு பிடிஎஸ் கல்லூரியில் 13 சீட்களும், அரசு சுயநிதி பிடிஎஸ் கல்லூரியில் 94 சீட்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 5 ஆயிரத்து 822 சீட்களும், அரசு மற்றும் சுயநிதி பிடிஎஸ் கல்லூரிகள் ஆயிரத்து 430 சீட்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : மதுரை அரசு பள்ளிகளில் படித்த 17 மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு தேர்வு