ETV Bharat / state

மருத்துவப் படிப்பு கலந்தாய்வு: மாணவர்களின் சான்றிதழில் சந்தேகம்

சென்னை: மருத்துவப் படிப்பு கலந்தாய்விற்கு வந்த மாணவர்களின் இருவரிடம் இருப்பிட சான்றிதழில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க விடாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

mbbs
mbbs
author img

By

Published : Dec 3, 2020, 7:58 PM IST

மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன் வெளியிட்டுள்ள இன்று செய்திக் குறிப்பில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு இன்று (டிசம்பர் 3) நடைபெற்ற கலந்தாய்விற்கு 450 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் கலந்தாய்வில் 436 மாணவர்கள் பங்கேற்றனர். 14 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்.பி.பி.எஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 363 இடங்களையும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 51 இடங்களையும், பிடிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 4 இடத்தையும் என 418 இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.

14 மாணவர்கள் தங்களுக்கான இடங்களை காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளனர். 2 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளனர்.அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 859 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 945 இடங்களும்,பிடிஎஸ் படிப்பில் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 146 இடங்களும், தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 985 இடங்களும் காலியாக உள்ளன.

மருத்துவ படிப்பு கலந்தாய்விற்கு இன்று வந்த மாணவர்களில் இருவரின் இருப்பிட சான்றிதழ்கள் சந்தேகம் இருந்ததால் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. கலந்தாய்வில் பங்கேற்க வந்த மாணவர்களில் இதுவரை இருப்பிடச் சான்றிதழ் சந்தேகம் என 12 மாணவர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்வதை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக மருத்துவக் கல்வி துணை இயக்குனர், சட்டம் சார்ந்த மருத்துவர்கள், வட்டாட்சியர் வட்டாட்சியர் என ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு சந்தேகப்படும் மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழ் ஆய்வு செய்யப்படுகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.