சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.27) சட்டத்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இதில் சட்டத்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டார்.
1. அரசு சட்டக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு (எல்.எல்.எம்) தொடங்குதல். (சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி புதுப்பாக்கம், செங்கல்பட்டு மற்றும் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி)
2. அரசு சட்டக் கல்லூரிகளில் புதிதாக நூலகக் கட்டடம் ரூபாய் 14 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
3. அரசு சட்டக் கல்லூரிகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ரூபாய் 25 லட்சம் செலவில் நிறுவப்படும்.
4. சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி பட்டரைபெரும்புதூர் வளாகத்தில் விளையாட்டு திடல் ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
5. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு சட்டக்கல்லூரி நூலகங்களுக்கும் சட்டப் புத்தகங்கள் மற்றும் ஏணைய இதழ்கள் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் வாங்கப்படும்.
6. சட்டத்துறையில் புதிய சட்டப் பட்டதாரிகளுக்கான தன்னார்வ பயிற்சித் திட்டம் ரூபாய் 40.80 லட்சம் செலவில் தொடங்கப்படும்.
7. திருச்சி உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் புதிய சட்ட மையம் ரூபாய் 10 லட்சம் செலவில் நிறுவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தஞ்சாவூர் தேர் விபத்து; கூடுதல் நிவாரணம் வழங்க அதிமுக கோரிக்கை