ETV Bharat / state

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் - Marxist Communist Governor of Tamil Nadu

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக கோரி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்

author img

By

Published : Jan 20, 2023, 9:35 PM IST

சென்னை: தமிழ்நாடு பெயரை பயன்படுத்த மறுத்தது, தமிழ் நாட்டுக்கான நீண்ட நெடிய போராட்டத்தை சிறுமைப்படுத்தியது, அரசின் 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மறுப்பது, அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமாக செயல்படுவது என ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு வருகிறார்.

இதனைக் கண்டித்தும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என்றும்; ஒன்றிய அரசு அவரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. அதனைத் தொடர்ந்து அங்கு ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக முற்றுகையிடச் சென்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து கைது செய்தனர்.

இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காத ஆர்.என்.ரவி, ஆளுநர் தானா? அல்லது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களின் ஏஜென்டா? இந்தியாவிலேயே சட்ட மன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த ஒரே ஆளுநர் ஆர்.என்.ரவிதான். அதேபோன்றே, தமிழ்நாட்டிலிருந்தும் வெளியேறுவதுதானே நியாயம்?
சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 21 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். மசோதாக்களின் மீது விளக்கம் கோரலாம் அல்லது திருப்பி அனுப்பலாம். கிடப்பில் போட்டு வைத்திருக்கக் கூடாது.

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்

தமிழ்நாட்டு மக்களை, சட்டமன்றத்தை, மசோதாக்களை ஏற்காவிடில் ஆளுநராக நீடிக்க எந்த அருகதையும், தகுதியும் இல்லை. மக்களை அவமதித்துள்ள நிலையில், ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியில் நீடிக்கக் கூடாது. ஆற்றில் தண்ணீர் செல்லும் போது, குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்க்கும். அதுமாதிரி, பிரதமர் குட்டியை (ஆளுநர்) விட்டு ஆழம் பார்க்கிறார். அதை தமிழ்நாடு அனுமதிக்காது. அரசியல் சட்டத்திற்கு விரோதமாகவும், தமிழ்நாட்டின் பண்பாடு, கலாசாரத்தை மதிக்காமல் ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. அவருக்கு வக்காலத்து வாங்கும் பாஜக தலைவர் அண்ணாமலையும் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கூறியுள்ளார்.

இவர்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள். இவர்களை விரட்டியடிக்கிற காலம் வரப்போகிறது. என்பதை ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிரூபிக்க உள்ளது. தமிழ்நாட்டில் ஆளுநர் இவ்வளவு அசிங்கப்பட்டு, அவமானப்பட்டது போதாதா? நாகரீகமாக, நயமாக சொல்கிறோம், புரிகிற வகையில் சொல்லவும் மக்கள் தயங்கமாட்டர்கள். ஆளுநர் பதவியில் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடைபெறும்" எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன் ,"ஆளுநராக நீடிப்பதற்கான அனைத்து தகுதிகளையும் ஆர்.என்.ரவி இழந்துவிட்டார். ஒன்றிய அரசின் பிரதிநிதி என்பதை தவிர ஆளுநருக்கு வேறு எந்த அதிகாரமும் இல்லை என்பதை அம்பேத்கர், அரசியல் சாசன சபையில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை முடிவின்படி செயல்படுவதுதான் அவருக்கு உள்ள வேலை. அதிகார வரம்புகளை மீறி செயல்படுவதோடு, சனாதன கருத்துகளைப் பகிரங்கமாக பரப்பி வருகிறார். அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக, ஒரு மதச்சார்பற்ற நாடு என்று உலகில் கிடையாது என்கிறார்.

மாநில அரசின் உரிமைகளை காலில் போட்டு மிதித்து வருகிறார். ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அந்த விளையாட்டை தடை செய்து கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கு அனுமதி தராமல், ஆன்லைன் ரம்மி முதலாளிகளுடன் ரகசிய பேச்சு நடத்துகிறார். இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘ரம்மி ரவி’ என அழைக்கும் மோசமான நிலை உருவாகி உள்ளது. சட்டமன்ற கூட்டத்தில் தரம்தாழ்ந்து நடந்து கொண்டார். அமைச்சரவை கொடுக்கும் அறிக்கையை, ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் அப்படியே வாசிக்க வேண்டும்.

இதற்கு மாறாக ஆளுநர் சில பகுதிகளை நீக்கி, சேர்த்து வாசித்துள்ளார். கூட்டாட்சி, சமூகநீதி, பெண் உரிமை போன்ற வார்த்தைகளை தவிர்த்த அவர், பெரியார், அண்ணா, கருணாநிதி, அம்பேத்கரின் பெயரை கூட உச்சரிக்க மறுத்துள்ளார். தமிழ்நாடு என்ற பெயரே அவருக்கு கசக்கிறது. மக்களின் கொந்தளிப்பையடுத்து, தமிழகம் என்று பேசியதற்கு, அவர் கொடுத்துள்ள விளக்கம் அதை விட மோசமாக உள்ளது. அவர் பேசியதை புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு தமிழ்நாட்டில் அறிவாளிகள் இல்லை என்கிறார். இந்த விளக்கம் ஏற்புடையதல்ல.

பொங்கல்விழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என அச்சடிக்க மறுத்தது ஏன்?.

சட்டமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் என்பதை உச்சரிக்க மறுத்தது ஏன்? தமிழ்நாடு, தமிழ்மொழி, திருக்குறளை, மதச்சார்பின்மையை அங்கீகரிக்க மறுக்கும் அவர் ஆளுநராக இருப்பதற்கு அறவே தகுதி இல்லை. எனவே, ஆளுநர் உடனடியாக பதவியிலிருந்து வெளியேற வேண்டும். ஒன்றிய அரசு, ஆளுநர்களை பயன்படுத்தி, பாஜக ஆளாத மாநிலங்களில் நயவஞ்சகமான முறையில், போட்டி ஆட்சியை நடத்த முயற்சிக்கிறார்கள். கேரளா, தெலங்கானா, பாண்டிச்சேரி, டெல்லி போன்ற இடங்களில் இதுதான் நடக்கிறது. இத்தகைய ஒன்றிய அரசின் போக்கை கண்டித்தும், ஆளுநர் பதவி உடனடியாக பதவி விலக வேண்டும், ஒன்றிய அரசு அவரை திரும்ப பெற வேண்டும்.

தமிழ்நாடு அரசு, அரசியல் கட்சிகள் ஏற்காத, பாஜகவின் எடுபிடியாக செயல்படக் கூடிய ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும். ஒன்றிய அரசு அவரை திரும்ப பெற வேண்டும். இதனை செய்யாவிடில், மதச்சார்பற்ற கட்சிகள் மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளை இணைத்து வெகுஜன அமைப்புகளை இணைத்து போராடுவோம்" என கூறினார்.

இதையும் படிங்க:பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் : ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.