சென்னையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், எம்ஜிஆர் மன்ற தென்சென்னை வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் பவானி சங்கரின் மகன் திருமணம், எம்ஜிஆர் மன்ற மாநில செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது.
இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா, முன்னாள் மாநகராட்சி மன்ற உறுப்பினர் சின்னையன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஜெயலலிதா நினைவிடத்தில் நடைபெற்ற முதல் திருமணம் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரின் ஆசியுடன் நடைபெறும் முதல் திருமணம் இது. இந்த திருமணம் நடத்துவதற்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அனுமதி வழங்கினர். மறைந்த முதலமைச்சரின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் தலைமையில் இத்திருமணம் நடைபெறுவதை நாங்கள் பெருமையாக எண்ணுகிறோம் என அவர் கூறினார்.