ETV Bharat / state

புயல்: காற்றின் வேகம் தாங்காமல் சரிந்து விழுந்த காவல்துறையின் செல்போன் டவர்

author img

By

Published : Dec 10, 2022, 2:01 PM IST

சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காவல் கட்டுப்பாட்டு அறையின் செல்போன் டவர் மாண்டஸ் புயல் காற்றின் வேகம் தாங்காமல் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

மாண்டஸ் புயல்: காற்றின் வேகம் தாங்காமல் சரிந்து விழுந்த காவல்துறை செல்போன் டவர்

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக நேற்று சென்னையில் பலத்த காற்றுடன் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. புயல் காரணமாக வீசிய சூறைக்காற்றால் சென்னை மட்டுமல்லாது சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. வீட்டின் கூரைகளும் பெயர்ந்து விழுந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

இந்நிலையில் சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் செல்போன் டவர், நேற்று பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றின் காரணமாக இன்று காலை சுமார் 7.30 மணி அளவில் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக எழும்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சரிந்து விழுந்த செல்போன் டவரை அகற்றி அப்புறப்படுத்தினர்.

மாண்டஸ் புயல் காரணமாக வீசிய காற்றின் வேகத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் காவல்துறையினரின் செல்போன் டவர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: புயல் எதிரொலி - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.