ETV Bharat / state

குழந்தைகளை ஆசீர்வதிக்க கூறி மூதாட்டியிடம் 3 தங்க மோதிரங்கள் அபேஸ் - 3 தங்க மோதிரங்கள் அபேஸ்

சென்னை: சென்னையில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் ஆசை வார்த்தையில் பேசி நூதன முறையில் நகைகளை பறித்துச் சென்ற நபரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

old lady
மூதாட்டி
author img

By

Published : Jan 24, 2021, 11:32 PM IST

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை துவாரகா நகர் 3ஆவது தெருவைச் சேர்ந்தவர் ரவணம்மா (65). இவரது மகன் பிரசாத் பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் தென் சென்னை மாநில பொதுச் செயலாளர்.

மூதாட்டி ரவணம்மா நேற்று (ஜன.23) மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ராவணம்மாவை வழிமறித்து, அருகில் இருந்த ஒரு வீட்டைக் காட்டி, அங்கு குழந்தைகள் நிகழ்ச்சி நடப்பதாகவும், அதில் கலந்து கொண்டு குழந்தைகளை ஆசிர்வதிக்க பெரியவர்கள் வரவேண்டும் என குடும்பத்தினர் எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளை ஆசிர்வதிப்பது புண்ணியம் என நம்பிய மூதாட்டி ரவணம்மா, சற்றும் சந்தேகிக்காமல் அங்கு சென்றுள்ளார். அவரை அந்த வீட்டின் கீழ்படியில் அமரச் சொல்லிவிட்டு, அந்த அடையாளம் தெரியாத ஆசாமி யாரிடமோ பேசுவது போல பாவ்லா காட்டி மூதாட்டியை நம்ப வைத்துள்ளார். சிறிது நேரத்தில் கீழே வந்த அவர், குழந்தைகளின் பெற்றோர் பணக்காரக் குடும்பத்தினர் என்றும், குழந்தைகளை ஆசிர்வதிப்பவர்களுக்கு தங்க மோதிரம் அளிப்பார்கள் என்றும் மெல்ல மூதாட்டிக்கு ஆசை காட்டியுள்ளார்.

தங்க மோதிரம் கொடுக்க அளவு காண்பித்து வருவதாகக் கூறி மூதாட்டியின் கையில் இருந்த மூன்று மோதிரங்களையும் நைசாக பேசி அந்த நபர் வாங்கிச் சென்றுள்ளார். இதனிடையே அந்த வீட்டில் இருந்த காவலாளி தனியாக அமர்ந்திருந்த மூதாட்டியை கவனித்து விசாரித்துள்ளார்.

அப்போதுதான் மூதாட்டிக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டி கூறிய அடையாளங்களை வைத்து விசாரித்தில், இதே பாணியில் அந்த நபர் பல மூதாட்டிகளிடம் வழிப்பறி செய்து வருவது தெரியவந்தது.

சிசிடிவி

அந்த அடையாளம் தெரியாத நபர் சென்னை சிட்டி சென்டர், திருவள்ளூவர் சிலை அருகே இதே போன்று நூதன நகை திருட்டில் ஈடுப்பட்டதாக ஏற்கனவே புகார் உள்ளதாகக் கூறும் காவல்துறையுழ, சிசிடிவி காட்சிகளை கொண்டு திருடனை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:சிசிடிவி: போலீசை பார்த்து தெறித்து ஓடிய திருடர்கள்... ரத்தம் சொட்டிய நிலையிலும் துரத்திப் பிடித்த காவலர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.