சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் ஆயுதப்படை காவலராக செயின்ட் தாமஸ் மவுண்டில் பணிபுரிந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சொந்த வேலை காரணமாக தனது இருசக்கர வாகனத்தை கிண்டி காவல் நிலையத்தில் நிறுத்தி விட்டு வெளியூர் சென்றார். இந்நிலையில், நேற்று அதிகாலை சென்னை திரும்பிய அவர், வாகனத்தை எடுப்பதற்காக கிண்டி காவல் நிலையம் வந்தார்.
ஆனால், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, கிண்டி காவல் நிலையத்தில் இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு அருண்குமார் புகார் அளித்தார். பின்னர், கிண்டி காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர். அதில், இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை ஒட்டிச் செல்வது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் கோடாக் மகிந்திரா அடையாறு கிளையில் மேலாளராக பணிபுரியும் அருண்ராஜ் என்பது தெரியவந்தது. இவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கியதால் போலீசார் சிறைபிடித்து காவல் நிலையத்தில் வைத்தனர். எனவே, காவல் நிலையத்தில் தனது வாகனத்தை எடுக்க சென்ற போது, தவறுதலாக காவலரின் பைக்கை மாற்றி எடுத்து வந்ததாக தெரிவித்தார். தற்போது, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'செக்கிங்கைப் பார்த்து தெறித்து ஓடிய கொரிய இளைஞர்' - பையில் இருந்த 4 கிலோ தங்கம்!