ETV Bharat / state

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிரபல கொள்ளையன் கைது! - Man jailed for pick pocketing sleeping commuters

சென்னை : கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்த ராணுவ வீரரிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற பிரபல கொள்ளையன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

cmbt
author img

By

Published : Nov 2, 2019, 10:49 PM IST

எப்போதும் கூட்ட நெரிசலாகக் காணப்படும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், இரவு நேரங்களில் ஏராளமான பயணிகள் உறங்குவதுண்டு. இந்நிலையில், நேற்று இரவு மேல்மலையனூரைச் சேர்ந்த ராணுவ வீரர் தமிழ்ச்செல்வன் பேருந்து நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த ஒரு நபர் தமிழ்ச்செல்வன் மீது போர்வையைப் போர்த்துவதாக சென்று பிக்பாக்கெட் அடித்துள்ளார். இதனிடையே திடீரென விழித்துக்கொண்டு தமிழ்ச்செல்வன், அந்த நபரை கையும் களவுமாகப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அந்த நபர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் வினோத் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, வினோத் மீது வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் முருகன், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார். வினோத்திடமிருந்து மூன்று பைகள் மேலும் அதிலிருந்த 2500 ரூபாய் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Intro:Body:சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள ராணுவ வீரரிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த கொள்ளையன் கைது...

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் என்பது பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்லக்கூடிய பயணிகளின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி இரவு நேரங்களில் உறங்க கூடிய பயணிகள் மீது போர்வையை போர்த்தி விட்டு கொள்ளையடிப்பதில் கைதேர்ந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த வினோத் என்பவன் நேற்று இரவு உறங்கிக்கொண்டிருந்த மேல்மலையனூர் சேர்ந்த ராணுவ வீரர் தமிழ்ச்செல்வன் மற்றும் சிலருடன் போர்வையைப் போர்த்திவிட்டு பிக்பாக்கெட் அடித்துள்ளார்.

அப்போது கையும் களவுமாக ராணுவ வீரர் தமிழ்ச்செல்வன் கொள்ளையன் வினோத்தை பிடித்து கோயம்பேடு பேருந்து நிலைய காவல் துறையிடம் ஒப்படைத்தனர் கொள்ளையன் வினோத் மகாராஷ்டிராவை சேர்ந்த பிரபல கொள்ளையன் என்பதும் தெரியவனாது.இதனை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் முருகன் வழக்கு பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.  கொள்ளையனிடமிருந்து 3 பணப்பைகள் மற்றும் 2500 ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது...
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.