காதலர் தின நாளில் 143 மரக்கன்று வைத்து குறுங்காடு அமைக்கும் பணியில் அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், கோ க்ரீன் ரோட்டரி சங்கம் மற்றும் கம்மியூணி ட்ரீ அமைப்பினர் ஈடுபட்டனர்.
இதில் நடிகை ரம்யா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களுடன் சேர்ந்து மரக்கன்றுகள் நட்டு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரம்யா பாண்டியனை கௌரவிக்கும் விதமாக FALL IN LOVE WITH TREES என்னும் வாசகம் அடங்கிய ரம்யா பாண்டியனின் ஓவியத்தை இயற்கை ஆர்வலர்கள் அன்பளிப்பாக அளித்தனர்.
உள்ளூர்வாசி ரகளை
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ரம்யா பாண்டியன் முன் உள்ளூர்வாசி ஒருவர் என்னிடம் சொல்லாமல் என்ன நடக்கிறது முதலில் என்னிடம் கூறுங்கள் என ரகளையில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஒருவழியாக அவரை சமாளித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் லுங்கியுடன் வந்த நபரை சிறப்பு விருந்தினர் பட்டியலில் சேர்த்து வரிசையில் நிற்கவைத்ததும் அமைதியானார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரம்யா பாண்டியன், " இயற்கை மீதான காதல் எனக்கு எப்போதும் உண்டு. நீங்கள் காதலர்களாக இருந்தால் உங்கள் காதலுக்கு அன்பை காட்டுங்கள் என்னை போல் சிங்கிளாக இருந்தால் இயற்கையோடு அதிக அன்பை காட்டுங்கள்" எனத் தெரிவித்தார்.