சென்னை: சென்னையில் வசிக்கும் நபர் ஒருவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு மாங்காட்டில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே தனது மகள் ஷெரினிடம், தனது வீட்டில் உள்ள நகை, பணம் மற்றும் வீட்டில் அசல் பத்திரங்களை எடுத்து பாதுகாப்பாக லாக்கரில் வைக்கும்படி கூறியுள்ளார்.
ஷெரின் வீட்டிற்கு வந்து பார்த்தப்போது, நகை பணம் மற்றும் வீட்டின் அசல் பத்திரம் உள்ளிட்டவை லாக்கரோடு காணாமல் போனது தெரியவந்துள்ளது.
பின்னர் அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, புகாரளித்தவரின் பெரிய அண்ணன் சாதிக் என்பவர் அவரது மனைவியுடன் வந்து நகை, பணம் மற்றும் வீட்டின் அசல் பத்திரத்தையும் எடுத்து சென்றது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர், குற்றவாளி வெளிநாட்டிற்கு தப்பி செல்லலாம் என்று நினைத்து அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி ஹைதராபாத் விமான நிலையத்தில் சாதிக் கைது செய்யப்பட்டதோடு, அவரிடமிருந்து கொள்ளை அடித்த பொருட்களை பறித்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: தங்கச் சங்கிலி திருடர்கள் மூவர் சிக்கினர்; மத்திய சிறையில் அடைக்கலம்!