சென்னை : 66 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் தொடர்பாக இளைஞர் ஒருவர் "தான் பல ஆண்டுகளாக குரூப்-1 தேர்வு எழுதி வருவதாகவும், ஆனால் டிஎன்பிஎஸ்சி நேர்மையற்ற முறையில் அந்த பதவிகளை பணம் வாங்கிக்கொண்டு தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு விற்று விடுவதாகவும், இதனால் தன்னை போன்ற இளைஞர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதாகவும் பேசி சமூக வலை தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
அந்த வீடியோவை பகிர்ந்த சில மணிநேரத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி அளித்த புகாரில் "முகநூல் பக்கத்தில் தேர்வாணையத்தின் செயல்பாடுகளுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்கள் அந்த இளைஞர் பதிவிட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த இளைஞர் தன்னுடைய இணைய பக்கத்திலிருந்து அந்த வீடியோவை நீக்கியுள்ளார்.