ETV Bharat / state

பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டல விவகாரம் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு - MHC

பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட 2,900 ஏக்கர் நிலத்தை மீட்க கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டல விவகாரம்

author img

By

Published : Aug 11, 2021, 3:23 PM IST

சென்னை: பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக குன்னம் மற்றும் வேப்பந்தட்டை கிராமங்களில் 2,937 ஏக்கர் நிலம் 2007 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. தனியார் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ நிறுவனம்) நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டது.

இந்த நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, தமிழ் தேசிய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சிவபாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "சிறப்பு பொருளாதார மண்டலத்தில் வேலை என்ற வாக்குறுதி கூறி, ஏராளமான விவசாயிகளிடம் இருந்து தனியார் நிறுவனம் நேரடியாக நிலங்களை வாங்கிய போதும், அதில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்காமல் அந்த நிலங்களை அடமானம் வைத்து வங்கிகளில், சுமார் 1,500 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.

நில மோசடி

வங்கிகளில் பெற்ற கடனை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தியதன் மூலம், தனியார் நிறுவனம் நில உரிமையாளர்களை மோசடி செய்துள்ளது. இதற்கு அரசு அலுவலர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். ஆகையால் முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கை இன்று(ஆக.11) விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு மீது இரண்டு வாரங்களில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.