ETV Bharat / state

சூதாட்டங்களை மீண்டும் கொண்டுவர நினைப்பது கண்டிக்கத்தக்கது - சு.ஆ.பொன்னுசாமி - chennai district news

தமிழ்நாடு அரசின் நிதிநிலையை சரிசெய்ய எண்ணற்ற வழிகள் இருக்கும் போது உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் சூதாட்டங்களை தமிழ்நாட்டில் மீண்டும் கொண்டு வர நினைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

சு.ஆ.பொன்னுசாமி
சு.ஆ.பொன்னுசாமி
author img

By

Published : Jul 25, 2021, 5:55 PM IST

சென்னை : இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”1968 இல் மோசமாக இருந்த தமிழ்நாட்டின் நிதிநிலையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக "விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு" என்கிற முழக்கத்தோடு அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான அப்போதைய திமுக அரசால் நல்லெண்ண அடிப்படையில் கொண்டு வரப்பட்ட லாட்டரி சீட்டு முறை பேராசைக்காரர்களின் பிடியில் சிக்கி "ஒரு நம்பர் லாட்டரி", "சுரண்டல் லாட்டரி" என பல பரிமாணங்கள் அடைந்துள்ளது.

தினக்கூலி தொழிலாளர்களிடமும், ஏழை, எளிய, நடுத்தர மக்களிடமும் ஒரே சீட்டில் லட்சாதிபதிகளாக, கோடிஸ்வரர்களாகி விடலாம், நமது ஏழ்மை நிலை காணாமல் போகும், அதனால் ஏழைகள் வாழ்வில் விடியல் பிறக்கும் என்கிற பேராசையை தூண்டி விட்டதால் அதனை நம்பி ஏமாந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்தன.

லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்த ஜெயலலிதா

மேலும் பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் கூட தமிழ்நட்டில் அரங்கேறின என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் நல அணியின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். தினக்கூலி தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்களின் வருமானத்தையும், உயிரையும் காவு கேட்கிற திட்டமாக லாட்டரி சீட்டு முறை மாறிப் போனதால் 2003இல் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு அனைத்து மாநில லாட்டரி பரிசு சீட்டு விற்பனைக்கும் தமிழ்நாட்டில் முற்றிலுமாக தடை விதித்தது.

கொளுத்திப் போட்ட கார்த்திக் சிதம்பரம்

இந்நிலையில் பத்தாண்டு கால இடைவெளியில் மீண்டும் அரியணை ஏறியுள்ள திமுக அரசு தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி சீட்டை கொண்டு வர அதனை அரசே அச்சடிப்பதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளதாக கடந்த சில மாதங்களாகவே அரசு அச்சகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பலரும் புலம்பிக் கொண்டிருந்த நிலையில் அதற்கு அடித்தளமிடும் வகையில் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் கார்த்திக் சிதம்பரம் மக்கள் நலனை மறந்து தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி சீட்டை கொண்டு வர வேண்டும், அதனை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும் என பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கொளுத்திப் போட்டிருக்கிறார்.

நிதியமைச்சரின் விரோத செயல்

மக்கள் நலனுக்கு எதிரான கார்த்திக் சிதம்பரம் பேட்டி ஒருபுறமிருக்க கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கோவிட் நோய் தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போய், வேலையிழந்து, வாழ்வாதாரம் இழந்து மக்கள் அல்லல்பட்டு வரும் சூழலில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்து தினக்கூலி தொழிலாளர்களின் வருமானத்தை சுருட்டிய அரசு தமிழ்நாட்டின் நிதிநிலையை சரி செய்ய தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி சீட்டு, குதிரை பந்தயம் போன்ற தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சும் சூதாட்டங்களை கொண்டு வர குழு அமைத்திருப்பதாக நிதியமைச்சரே கூறியிருப்பது அதிர்ச்சியின் உச்சம் மட்டுமல்ல மக்கள் நலனில் அக்கறையற்ற அரசு செய்கின்ற மக்கள் விரோத செயலாகும்.

வாழ்வாதாரத்தை சுரண்டும் சூதாட்டம்

தமிழ்நாடு அரசின் நிதிநிலையை சரிசெய்ய எண்ணற்ற வழிகள் இருக்கும் போது உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் சூதாட்டங்களை தமிழ்நாட்டில் மீண்டும் கொண்டு வர நினைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் ஏற்கனவே சிறுவர் முதல் மகளிர் வரை மது தாராளமாக கிடைக்கின்ற வகையில் டாஸ்மாக் கடைகளை திறந்து உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினை குடிகாரர்களாக்கி, அவர்களை சோம்பேறிகளாக்கி தமிழ்நாட்டின் பெருமையை குழி தோண்டி புதைத்து, வடமாநில தொழிலாளர்களின் வருகைக்கு காரணமாக விளங்க அரசே ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

தமிழ்நாடு அரசின் கருத்துருவில் லாட்டரி சீட்டு, குதிரை பந்தயம் போன்ற சூதாட்டங்களை மீண்டும் கொண்டு வரும் எண்ணமிருக்குமானால் எந்த ஒரு சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் அதனை உடனடியாக கை விட வேண்டும். அத்துடன் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமுல்படுத்த டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பிலும், நம்மவர் தொழிற்சங்க பேரவை சார்பிலும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:

QR கோடால் கோலோச்சும் அரசுப் பள்ளி ஆசிரியர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.