ETV Bharat / state

கரோனா சூழல்: மக்கள் பணியில் மக்கள் நீதி மையம் தொண்டர்கள்! - Makkal Needhi maiam party members

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஒரு லட்சம் நபர்களுக்கு உணவு, அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள், பாதுகாப்புக் கருவிகள் உள்ளிட்டவைகளை மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்கள் வழங்கினர்.

மக்கள் பணியில் மக்கள் நீதி மையம் தொண்டர்கள்

author img

By

Published : May 3, 2020, 9:47 AM IST

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதில் குறிப்பாக விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் ஒரு லட்சம் நபர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்கள் பொருட்கள், மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த கிராமசபைக் கூட்டம், கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் கமல்ஹாசனால் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது கூட்டத்தை மே ஒன்றாம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

மக்கள் பணியில் மக்கள் நீதி மையம் தொண்டர்கள்
மக்கள் பணியில் மக்கள் நீதி மையம் தொண்டர்கள்

ஆனால் தற்போது பேரிடர் சூழ்நிலையிலும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்கள் மக்கள் பணிகளை தொடர வேண்டும் என கமல்ஹாசன் தொண்டர்களிடம் வலியுறுத்தியதையடுத்து, உணவு, அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள், பாதுகாப்புக் கருவிகள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு, சுமார் ஒரு லட்சம் நபர்களுக்கு உதவிகள் சென்று சேர்ந்துள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலால் அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரமும் முடங்கியுள்ள நிலையில், மக்கள் நீதி மையத்தினரின் இந்த சேவை பொது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் இன்று ஒரே நாளில் ஆறு காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.