ETV Bharat / state

சென்னையில் தொடரும் கனமழை.. உயரும் ஏரிகளின் நீர்மட்டம்! - Puzhal lake

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருந்துவரும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்வரத்து அதிகரத்துள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் தொடரும் கனமழையால் குடிநீர் ஏரிகளில் உயரும் தண்ணீர் அளவு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 7:13 PM IST

சென்னை: தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழையானது பெய்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.

வடதமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புறநகர் பகுதிகளிலும் இன்று(நவ.23) வரை கனமழையானது தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக நீடித்திருக்கும் பலத்த மழைக் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

தொடர் மழையின் காரணமாக, புழல் ஏரிக்கு 525 கனஅடி தண்ணீர் நிறைந்துள்ளது. மேலும் இந்த ஏரியில் 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேப்போன்று சோழவரம் ஏரியிலும் 692மி.கனஅடி தண்ணீர் நிறைந்துள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 1080 மி.கனஅடியாக உள்ள நிலையில், 197 கனஅடி தண்ணீர் ஏரிக்கு வருகிறது.

இதைத்தொடர்ந்து, 3645 மி.கனஅடி மொத்த கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில், 3138 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 22 அடியை நீர்மட்டம் மீண்டும் எட்டியுள்ளது. தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மழை நீடித்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நீலகிரியில் கனமழையால் சாலையில் மண் சரிவு.. மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே போக்குவரத்து பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.