சென்னை: மதுரையைச்சேர்ந்த ராஜா பிரபு என்பவர் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில், தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ராஜா பிரபு வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
வழக்குத் தொடர்பான விசாரணை முடியாத நிலையில், வெளிநாட்டிற்கு ராஜா பிரபு தப்பிச்செல்லாமல் இருக்க மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினார். இந்நிலையில், துபாய் வழியாக ஸ்காட்லாந்து தப்பிச்செல்ல ராஜா பிரபு திட்டமிட்டு சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.
துபாய் வழியாக ஸ்காட்லாந்து தப்பிச்செல்ல இருந்த ராஜா பிரபுவை தடுத்து நிறுத்திய குடியுரிமை அலுவலர்கள், போலீசாருக்குத் தகவல் அளித்தனர். ராஜா பிரபுவை கைது செய்து விசாரிக்கும் நடவடிக்கைகளில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க : வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியவர் விமான நிலையத்தில் கைது