ETV Bharat / state

பிபிசியின் மோடி ஆவணப்படம்: தடையை மீறி சென்னை பல்கலை. வளாகத்தில் பார்த்த மாணவர்கள்! - BBC Modi documentary

BBC Documentary On 2002 Gujarat Riots: பிபிசியின் குஜராத் மதக் கலவரம் 2002 குறித்த ஆவண படத்தை இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் (ஜன.27) பார்வையிட்டனர். அப்படத்தை தமிழ்நாடு முழுவதும் திரையிட வேண்டும் என அம்மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 27, 2023, 8:05 PM IST

பிபிசியின் மோடி ஆவணப்படம்: தடையை மீறி சென்னை பல்கலை. வளாகத்தில் பார்த்த மாணவர்கள்!

சென்னை: பிபிசியின் குஜராத் மதக்கலவரம் 2002 குறித்த ஆவணப் படத்தை (BBC Documentary On 2002 Gujarat Riots) இன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் (ஜன.27) பார்வையிட்டனர். அப்படத்தை தமிழ்நாடு முழுவதும் திரையிட வேண்டும் என அம்மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் (Godhra train burning incident) குறித்து பிபிசி செய்தி நிறுவனம் இரண்டு பாகங்கள் அடங்கிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. மத்திய அரசின் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தால் இந்த ஆவணப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யவும் பொதுவெளிகளில் திரையிடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 26ஆம் தேதி சென்னை மாநிலக் கல்லூரியின் விக்டோரியா விடுதியில் மாணவர்கள் ஆவணப்படத்தை பார்த்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் மாலை 3 மணிக்கு ஆவணப்படத்தை திரையிட இந்திய மாணவர் சங்கத்தின் ஏற்பாடு செய்திருந்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கௌரி, 'சென்னை பல்கலைக்கழகத்தில் எந்தவித ஆவணப்படத்தையும் வெளியிடுவதற்கு மாணவர்கள் தங்களிடம் அனுமதி பெறவில்லை. பிபிசி தயாரித்துள்ள ஆவணப் படத்தை வெளியிடுவது குறித்து அரசின் வழிகாட்டுதல்படி செயல்படுவோம்' என்று கூறினார்.

திரையிடப்பட்ட மோடி குறித்த ஆவணப்படம்: இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நூற்றாண்டு விழா கலையரங்க கூட்டத்தின் வெளியே 10-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து இந்த ஆவணப்படத்தை லேப்டாப் மூலமாக இன்று (ஜன.27) பார்த்தனர். அப்போது சென்னை பல்கலைக்கழக பாதுகாப்பு காவல் அதிகாரி சந்திரமெளலி, மாணவர்களிடம் அங்கு இருந்து கலைந்து போக சொல்லியே அறிவுறுத்தினார்.

ஆனால், மாணவர்கள் யாரும் செல்லாமல் அங்கேயே அமர்ந்து ஆவணப்படத்தை பார்த்தனர். ஏற்கனவே, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில், மாணவர்கள் ஆவணப்படத்தை பார்க்க உள்ளதாக செய்தி வெளியான உடனேயே, அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், வெளியில் இருந்து வளாகத்திற்குள் மாணவர்களை வராமல் தடுத்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய, சென்னை பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி சந்திரமெளலி, ’சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பிரதமர் குறித்த ஆவணப்படத்தை திரையிட போவதாக தகவல் வந்தது. அரசு ஆவணப்படத்தை தடை செய்துள்ளதாக தகவல் வந்ததால் மாணவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தோம். ஆனால், இங்கு ஆவணப்படம் பார்த்தவர்கள் சென்னை பல்கலைக்கழக மாணவர்களே கிடையாது. ஏற்கனவே, படித்து விட்டு வெளியே சென்ற மாணவர்கள் தான் பார்க்கின்றனர்' என்று கூறினார்.

தமிழ்நாடு அரசே! ஆவணப்படத்தை வெளியிடுக: இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலளார் நிருபன் சக்கரவர்த்தி செய்தியாளர்களிடையே கூறுகையில், ’இதுபோன்று ஆவணப் படத்தை தடை செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பார்த்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் பொது இடங்களிலும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மோடி குறித்து ஆவணப்படம் திரையிடப்படும். தமிழ்நாடு அரசு இந்த ஆவணப்படத்தை வெளியிட வேண்டும்’ எனக் கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் மோடியின் பிபிசி ஆவணப்படத்தை திரையிடுவோம் - சிபிஐ(எம்) அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.