ETV Bharat / state

சிறப்பு நீதிமன்றத்தில் துவங்கிய விசாரணை... நேரில் ஆஜரான எஸ்.வி.சேகர்.. அடுத்து என்ன? - S Ve Shekher news

S Ve Shekher Abusive FB Post case: பெண் பத்திரிகையாளர் குறித்து எஸ்.வி.சேகர் மீதான அவதூறு வழக்கு விசாரணையை செப்டம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு: எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் எஸ்.வி.சேகர் ( கோப்புப்படம்)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 1:30 PM IST

சென்னை: நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகள் கொண்ட பதிவை, சமூக வலைதளங்களில் பதிவிட்ட வழக்கை, செப்டம்பர் 12ம் தேதி ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு, நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்கள் கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதுகுறித்து, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர், பெண்கள் மீதான வன் கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதனைத்தொடர்ந்து, 2020ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான தகவலை தெரிவித்ததாகவும், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் யூ-டியூபில் வீடியோ வெளியிட்டதாகவும், எஸ்.வி.சேகருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: "மாநாட்டுக்கு போன பொண்டாட்டியை காணவில்லை.. முதலில் ஜெயக்குமாரை தான் விசாரிக்கணும்"- உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி சேகர் மீதான வழக்கானது, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த இரு வழக்குகளை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். மனுவில், தனது பதிவுகளை உடனடியாக நீக்கியதுடன், தனது செயலுக்கு எஸ்.வி.சேகர் முகவும் வருத்தம் கோரியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில், தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், எஸ்.வி சேகருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில் தலையிட முடியாது. விசாரணையை தொடர்ந்து நடத்தலாம். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை எப்படி திரும்ப பெற முடியாதோ? அதேபோல ஒருமுறை ஒருவர் தெரிவித்த கருத்துக்களை, தவறானது என்றாலும் திரும்ப பெற முடியாது. ஒரு கருத்தின் விளக்கமும், அர்த்தமும் தெரியாமல் யாருக்கும் அனுப்பவோ? பகிரவோ? முடியாது என்று தீர்ப்பளித்தது.

மேலும், நீதிமன்றத்தில் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்ததால், தேசிய கொடியை அவமதித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு மட்டும் ரத்து செய்யப்பட்டது. பெண் பத்திரிக்கையாளர் குறித்து கருத்து தெரிவித்ததற்கான விசாரணையை, சிறப்பு நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டும். மேலும், விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கை ரத்து செய்ய மறுத்ததுடன், சிறப்பு நீதிமன்றத்தில் நிவாரணம் பெறவும் கடந்த 19ம் தேதி உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான எஸ்.வி சேகர் மீதான விசாரணையை செப்டம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: பழம்பெரும் மோட்டார் வகனங்களின் கண்காட்சி.. தொடங்கி வைத்து பார்வையிட்ட காவல் ஆணையர் சந்தீப்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.