ETV Bharat / state

வனக்குற்றங்கள் குறித்து சிபிஐ சுதந்திரமாக விசாரிக்கலாம் - சென்னை உயர் நீதிமன்றம் - TANGEDCO

வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது தொடர்பான வழக்குகளில் உண்மையை கண்டறிய சிபிஐ சுதந்திரமாக புலன் விசாரணை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கோவையில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கற்சூளைகளின் மின் இணைப்பைத் துண்டிக்காவிட்டால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

வனக்குற்றங்கள் குறித்து சிபிஐ சுதந்திரமாக விசாரிக்கலாம்

author img

By

Published : Feb 14, 2023, 9:34 PM IST

சென்னை: தமிழகத்தில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்கக் கோரிய வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வனக்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சிபிஐ, வனத்துறை, கேரளா மற்றும் கர்நாடக அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.

யானைகள் பாதுகாப்பு, யானைகள் வழித்தடம் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ் குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (பிப்ரவரி 14) விசாரணைக்கு வந்தன. அப்போது, சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வனக்குற்றம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சுதந்திரமாக விசாரிக்கலாம் எனக் கூறி வழக்குகளின் விசாரணையை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

செங்கல் சூளை அகற்றம்: மேலும் இந்த வழக்குகள் விசாரணையின் போது, கோவை மாவட்டம் காரமடை உள்ளிட்ட பள்ளத்தாக்குகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த செங்கற்சூளைகளை மூட உத்தரவிட்டும், அவற்றின் மின் இணைப்புகள் துண்டிக்கப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சட்டவிரோதமாக செயல்படும் செங்கற்சூளைகளுக்கான மின் இணைப்பைத் துண்டிக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது ஏன்? என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், பிப்ரவரி 21-ம் தேதிக்குள் மின் இணைப்பைத் துண்டிக்காவிட்டால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர்.

இதையும் படிங்க: கோவை கொலை வழக்கு - இருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.